| 2795. | நறையூரிற் சித்தீச் சரம்நள் ளாறு | | | நாரையூர் நாகேச்சரம் நல்லூர் நல்ல | | | துறையூர் சோற்றுத்துறை சூல மங்கை | | | தோணிபுரந் துருத்தி சோமேச் சரம் | | | உறையூர் கடலொற்றி யூரூற் றத்தூர் | | | ஓமாம் புலியூர்ஓர் ஏட கத்துங் | | | கறையூர் கருப்பறியல் கன்றாப் பூருங் | | | கயிலாய நாதனையே காண லாமே. | 10 |
அதிகைவீரட்டானம். நாயனார் திருவருள் பெற்றதலம் என்பது வெளிப்படை. கூடல் - மதுரை; பாண்டிநாட்டுத் தலம். திண்டீச்சரம். கூந்தலூர், கூழையூர், குமரி, கொங்கு, அசோகந்தி இவை வைப்புத் தலங்கள். அண்டர் - தேவர். 10. பொ-ரை: நறையூரிலுள்ள சித்தீச்சரம், நள்ளாறு, நாரையூர், நாகேச்சரம், நல்லூர், மேம்பட்டதுறையூர், சோற்றுத்துறை, சூல மங்கை, தோணிபுரம், துருத்தி, சோமேச்சரம், உறையூர், கடலை அடுத்த ஒற்றியூர், ஊற்றத்தூர், ஓமாம்புலியூர், ஒப்பற்ற ஏடகம், கறையூர், கருப்பறியல், கன்றாப்பூர் .... ஆகிய இடங்களில்கயிலாய நாதனைக் காணலாம். கு-ரை: நறையூர்ச் சித்தீச்சரம், நள்ளாறு, நாரையூர், நாகேச் சரம், நல்லூர், சோற்றுத்துறை, துருத்தி, உறையூர், ஓமாம்புலியூர், கருப்பறியலூர், கன்றாப்பூர் இவை சோழநாட்டுத் தலங்கள். 'சித்தீச்சரம்' என்பது நறையூர்த் திருக்கோயிலின் பெயர். நல்லூர், நாயனார்க்குத் திருவடிசூட்டிய தலமாதல் அறிக. தோணிபுரம் - சீகாழி; இது மேலும் அருளிச்செய்யப் பட்டது. உறையூர் - மூக்கீச்சரம். துறையூர், நடுநாட்டுத் தலம். ஒற்றியூர், தொண்டை நாட்டுத் தலம். 'கடலைச் சார்ந்த ஒற்றியூர்' என்க. ஏடகம், பாண்டிநாட்டுத் தலம். சூலமங்கை, சோமேச்சரம், ஊற்றத்தூர், கறையூர் இவைவைப்புத் தலங்கள்.
|