| 2812. | பொடியாடு மேனிப் புனிதன் கண்டாய் | | | புட்பாகற் காழி கொடுத்தான் கண்டாய் | | | இடியார் கடுமுழக்கே றூர்ந்தான் கண்டாய் | | | எண்டிசைக்கும் விளக்காகி நின்றான் கண்டாய் | | | மடலார் திரைபுரளுங் காவிரி வாய் | | | வலஞ்சுழியின் மேவிய மைந்தன் கண்டாய் | | | கொடியாடு நெடுமாடக் கொட்டை யூரிற் | | | கோடீச் சரத்துறையுங் கோமான் தானே. | 4 |
| 2813. | அக்கரவம் அரைக்கசைத்த அம்மான் கண்டாய் | | | அருமறைக ளாறங்க மானான் கண்டாய் | | | தக்கனது பெருவேள்வி தகர்த்தான் கண்டாய் | | | சதாசிவன்காண் சலந்தரனைப் பிளந்தான் கண்டாய் | | | மைக்கொண்மயிற் றழைகொண்டு வருநீர்ப் பொன்னி | | | வலஞ்சுழியான் கண்டாய் மழுவன் கண்டாய் | | | கொக்கமரும் வயல்புடைசூழ் கொட்டை யூரிற் | | | கோடீச் சரத்துறையுங் கோமான் தானே. | 5 |
4. பொ-ரை: துகில் கொடிகள் அசையும் உயர்ந்த மாடங்கள் நிறைந்த கொட்டையூரில் உள்ள கோடீச்சரத் துறையும் தலைவனாகிய சிவபெருமான் திருநீறு திகழுந் திருமேனியை உடையபுனிதனும், கருட வாகனனாகிய திருமாலுக்குச் சக்கராயுதத்தை உதவியவனும், இடிபோன்று அச்சந்தரும் முழக்கத்தையுடைய இடபத்தினை ஊர்பவனும், எட்டுத் திசைகளுக்கும் விளக்கமாய் நிற்பவனும், பூவிதழ்களைச் சுமந்த அலைகள் புரளும் காவிரியின் கரையிலுள்ள வலஞ்சுழியிடத்துப் பொருந்திய மைந்தனும் ஆவான். கு-ரை: பொடி - திருநீறு. புள் பாகன்- பறவை (கருட) வாகனத்தை உடையவன்; திருமால். ஆழி -சக்கரம். இடி ஆர் - இடிபோலும்; ஆர், உவம உருபு. ஏறு -இடபம். எண்டிசைக்கும் விளக்கு - உலக முழுதிற்கும் ஒளியைத்தரும் விளக்கு. மடல் - பூ; சினையாகுபெயர். கொடி ஆடு -துகிற் கொடிகள் அசைகின்ற. 5. பொ-ரை: கொக்குக்கள் அமர்ந்திருக்கும் வயல்கள் நாற்புறமும் சூழ்ந்துள்ள கொட்டையூரில் கோடீச்சரத்துறையும் தலைவனாகிய
|