பக்கம் எண் :

1069
 
2814. சண்டனைநல் லண்டர்தொழச் செய்தான் கண்டாய்

சதாசிவன் கண்டாய்சங் கரன்றான் கண்டாய்

தொண்டர்பலர் தொழுதேத்துங் கழலான் கண்டாய்

சுடரொளியாய்த் தொடர்வரிதாய் நின்றான் கண்டாய்

மண்டுபுனல் பொன்னிவலஞ்சுழியான் கண்டாய்

மாமுனிவர் தம்முடைய மருந்து கண்டாய்

கொண்டல்தவழ் கொடிமாடக் கொட்டை யூரிற்

கோடீச் சரத்துறையும் கோமான் தானே.

6

சிவபெருமான், சங்கு மணியையும், பாம்பையும் இடையில் கட்டியவனாய், உணர்தற்கரிய நான்மறைகளும் ஆறங்கங்களும் ஆனவனாய், தக்கனது பெருவேள்வியைத் தகர்த்தவனாய், சதாசிவனாய், சலந்தரன் உடலைப் பிளந்தவனாய், நீலநிற மயிற் பீலியை அடித்துக் கொண்டு வரும் நீரினையுடைய காவிரியின் கரையிலுள்ள வலஞ்சுழியில் வாழ்பவனாய், கையில் மழு ஏந்தியவனாய் விளங்குபவன் ஆவான்.

கு-ரை: மைக் கொள் மயில் - கருமை (நீல) நிறத்தைக் கொண்ட மயில்; இனி, 'மேகத்தை விரும்புகின்ற' என்றும் ஆம். ககர ஒற்று, விரித்தல். "தழை" என்றது, தோகையை. "கொக்கு அமரும் வயல்" என்றது, 'நீர் நீங்காத வயல்' என்பததைக் குறித்த குறிப்புமொழி.

6. பொ-ரை: கொடிகள் கட்டப்பட்டு, மேகங்கள் தவழும் வண்ணம் மிக உயர்ந்த மாடங்களைக் கொண்ட கொட்டையூரிலுள்ள கோடீச்சரத்துறையும் தலைவனாகிய சிவபெருமான், சண்டேசுரனை நல்ல தேவர்கள் தொழுமாறு செய்தவனும், சதாசிவனும், சங்கரனும், தொண்டர் பலரும் புகழ்ந்து வணங்கும் திருவடிகளை உடையவனும், பற்றிப் பின் தொடர்வதற்கு அரிய பேரொளிப் பிழம்பாய் நின்றவனும், மிக்குவரும் புனலையுடைய காவிரியின் கரையிலுள்ள வலஞ்சுழியில் வாழ்பவனும், பெருமைமிக்க தவத்தவர் நுகரும் அமிர்தமும் ஆவான்.

கு-ரை: "சண்டன்" என்றது, சண்டேசுவர நாயனாரை, அண்டர் - தேவர். "அரிதாய்" என்பதற்கு, 'அரிய பொருளாய், என உரைக்க. "மாமுனிவர் தம்முடைய மருந்து" என்றது' 'தேவர்கள் அமுதத்தை இறப்பை நீக்கும் மருந்தாக விரும்பி உண்பர்; பெருமை பொருந்திய தவத்தோர் அவ்வாறன்றிச்