பக்கம் எண் :

1070
 
2815.அணவரியான் கண்டாய் அமலன் கண்டாய்

அவிநாசி கண்டாயண் டத்தான் கண்டாய்

பணமணிமா நாக முடையான் கண்டாய்

பண்டரங்கன் கண்டாய் பகவன் கண்டாய்

மணல்வருநீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்

மாதவற்கும் நான்முகற்கும் வரதன் கண்டாய்

குணமுடைநல் லடியார்வாழ் கொட்டை யூரிற்

கோடீச் சரத்துறையுங் கோமான் தானே.

7

2816.விரைகமழும் மலர்க்கொன்றைத் தாரான் கண்டாய்

வேதங்கள் தொழநின்ற நாதன் கண்டாய்

அரையதனிற் புள்ளியத ளுடையான் கண்டாய்

அழலாடி கண்டாய் அழகன் கண்டாய்


சிவபிரானையே அம் மருந்தாக அறிந்து அடைவர்' என்றதாம்.கொண்டல் - மேகம்.

7. பொ-ரை: நற்குணமிக்க அடியார்கள் வாழ்கின்ற கொட்டையூரிலுள்ள கோடீச்சரத்துறையும் தலைவனாகிய சிவபெருமான், எட்டுதற்கரியவனாய், குற்றமற்றவனாய், அழிவில்லாதவனாய், மேலுலகத்து உள்ளவனாய், படமுடைய பெரிய நாகத்தை அணிபவனாய், பண்டரங்கக் கூத்தினை ஆடுபவனாய், ஐசுவரியம் முதலிய ஆறு குணங்களை உடையவனாய், மணலை வாரிக் கொண்டுவரும் நீரையுடையகாவிரியின் கரையிலுள்ள வலஞ்சுழியில் வாழ்பவனாய், திருமாலுக்கும் பிரமனுக்கும் அவர்கள் விரும்பிய அதிகாரத்தை வழங்குபவனாய் விளங்குபவன் ஆவான்.

கு-ரை: அணவுதல் - எட்டுதல். 'அணைவரியான்' என்பதும் பாடம். அவிநாசி - அழிவில்லாதவன். அண்டத்தான்- மேல் உலகத்தில் இருப்பவன். பணம் - பாம்பின்படம். மாதவன் - திருமால். வரதன் - வரத்தைக் (அவர்கள்விரும்பிய அதிகாரத்தை) கொடுப்பவன்.

8. பொ-ரை: குராமரங்கள் நிறைந்த சோலைகள் நாற்புறமுஞ் சூழ்ந்த கொட்டையூரிலுள்ள கோடீச்சரத்துறையும் தலைவனாகிய சிவபெருமான். மணங்கமழும் கொன்றைப் பூ மாலையை உடையவனும், வேதங்களால் போற்றப்படும் தலைவனும், புள்ளிகளை உடைய புலித்தோலை இடையில்