| வருதிரைநீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய் | | | வஞ்சமனத் தவர்க்கரிய மைந்தன் கண்டாய் | | | குரவமரும் பொழில்புடைசூழ் கொட்டை யூரிற் | | | கோடீச் சரத்துறையுங் கோமான் தானே. | 8 |
| 2817. | தளங்கிளருந் தாமரையா தனத்தான் கண்டாய் | | | தசரதன்றன் மகன் அசைவு தவிர்த்தான் கண்டாய் | | | இளம்பிறையும் முதிர்சடைமேல் வைத்தான் கண்டாய் | | | எட்டெட் டிருங்கலையு மானான் கண்டாய் | | | வளங்கிளர்நீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய் | | | மாமுனிகள் தொழுதெழு பொற்கழலான் கண்டாய் | | | குளங்குளிர்செங் குவளைகிளர் கொட்டை யூரிற் | | | கோடீச் சரத்துறையுங் கோமான் தானே. | 9 |
உடையாக உடுத்தியவனும், அழலாடுபவனும், அழகனும், தொடர்ந்துவரும் அலைகளையுடையதும் நீர் நிரம்பியதும் ஆகியகாவிரியின் கரையிலுள்ள வலஞ்சுழியில் வாழ்பவனும், வஞ்சமனத்தாரால் உணரப்படாத மைந்தனும் ஆவான். கு-ரை: விரை - வாசனை. வேதங்கள் தொழநின்ற நாதன் - வேதங்களால் போற்றப்படும் முதல்வன். 'குரா' என்பது, குரவு' என நின்றது. குரா, ஒருவகை மரம்.அமரும் - பொருந்தியுள்ள. 9. பொ-ரை: குளிர்ந்தகுளங்களில் செங்குவளை மலர் மேலெழுந்து விளங்கும் கொட்டையூரிலுள்ள கோடீச்சரத்துறையும் தலைவனாகிய சிவபெருமான், இதழ்கள் மிக்க தாமரை மலரை ஆதனமாக உடையவனாய், தயரதராமனுடைய துன்பங்களைக் களைந்தவனாய், இளம்பிறையையும் பாம்பினையும் கங்கையையும். தன்பழைய சடையில் வைத்தவனாய், கலைகள் அறுபத்து நான்கும் ஆனவனாய், வளத்தை மிகுவிக்கும் நீர்ப் பெருக்கினையுடைய காவிரியின் கரையிலுள்ள வலஞ்சுழியில் வாழ்பவனாய், முனிவர்கள் வணங்கி எழும் பொற்பாதங்களை உடையவனாய் விளங்குபவன் ஆவான். கு-ரை: தளம் - இதழ். தசரதன்மகன் - இராமன். அசைவு - தளர்ச்சி; அது, சீதையை இழந்துபின்னர் அடைந்த துன்பத்தையும் சீதையை
|