| 2818. | விண்டார் புரமூன் றெரித்தான் கண்டாய் | | | விலங்கலில்வல் லரக்கனுட லடர்த்தான் கண்டாய் | | | தண்டா மரையானும் மாலுந் தேடத் | | | தழற்பிழம்பாய் நீண்ட கழலான் கண்டாய் | | | வண்டார்பூஞ் சோலைவலஞ் சுழியான் கண்டாய் | | | மாதேவன் கண்டாய் மறையோ டங்கங் | | | கொண்டாடு வேதியர்வாழ் கொட்டை யூரிற் | | | கோடீச் சரத்துறையுங் கோமான் தானே. | 10 |
திருச்சிற்றம்பலம்
மீட்ட பின்னர் இராவணனைக் கொன்ற பழியினால் எய்திய துன்பத்தையும் குறிக்கும். இவ்விரு துன்பங்களையும் இராமன், சிவபிரானைப் பூசித்து நீங்கப் பெற்றனன் என்பதே உண்மை இராமாயணம். என்பது இன்றைய இராமாயணத்திலும் காணப்படுவது, பிற வாக்கியங்கள் இஞ்ஞான்று அதன்கண் காணப்படா தொழியினும் அவற்றை அறிவிக்கும் தலங்கள் அவற்றிற்கு என்றும் சான்றாய் நின்று நிலவும். எட்டு எட்டு இருங்கலைகள் - 'அறுபத்து நான்கு' எனவரையறை கூறப்படும் பெரிய கலைகள். "மாமுனிகள்" என்றது, தல வரலாற்றின்படி, ஏரண்டரையும், மார்க்கண்டேயரையும் சிறப்பாகக் குறிக்கும். 'குளம் கிளர் என இயையும், ஏழாவதன் தொகையில்மகரம், கெடாது நின்று திரிந்தது. கிளர் - மிக்குவிளக்குகின்ற. 10. பொ-ரை: ஓதிய நான்மறை ஆறங்க, வழிஒழுகும் வேதியர்கள் வாழ்கின்ற கொட்டையூரிலுள்ள கோடீச்சரத்துறையும் தலைவனாகிய சிவபெருமான், பகைவர் புரமூன்றையும் எரித்தவனும், வலிய அரக்கனாகிய இராவணன் உடலைக் கயிலை மலையின் கீழ் வைத்துச் சிதைத்தவனும், குளிர்ந்த தாமரையில் வாழ் நான்முகனும் திருமாலும் தேட நெருப்புப் பிழம்பாய் நீண்டவனாகிய கழலை உடையவனும், வண்டுகள் மொய்க்கும் பூஞ்சோலைகள்மிக்க வலஞ்சுழியில் வாழ்பவனும், தேவர்க்குத் தேவனும் ஆவான். கு-ரை: விண்டார் - பகைவர். விலங்கலில்- (கயிலாய) மலையின் கீழ். அடர்த்தான் - சிதைத்தான். இறைவனது ஆற்றலை (சத்தியை)த் திருவடியாகக் கூறும்மரவு பற்றி, "கழலான்" என்று அருளிச் செய்தாராகலின், அதற்கு 'சத்தியை உடையவன்' எனப் பொருள் கூறுக.
|