74. திருநாரையூர் பதிக வரலாறு: வாகீசர், தில்லையம்பலத்துள் ஆடுகின்ற பெருமான் கழல் வணங்கியிருக்கும் நாள்களில், சிவன் எம்மான் எனக் காட்டியியம்பிய காழிப்பெருந்தகை சீர் கேட்டு அதிசயித்து அவர் மலர்க்கழல்கள் வணங்குதற்கு விருப்பு வாய்ப்ப, அம்பலத்துக் கூத்தப்பிரான் அருள் பெற்றுத் திருப்புகலி செல்பொழுதில் திருநாரையூர் பணிந்து பாடியருளியது இத் திருப்பதிகம். (தி.12 திருநாவு.புரா. 179) குறிப்பு: இத்திருப்பதிகம், இறைவனைத் திருநாரையூரிற் கண்ட மகிழ்ச்சி மீதூர்வின்கண், அவனது பெருமைகள் பலவற்றையும் வகுத்துரைத்து, 'அப்பெருமானைநான் திருநாரையூரில் நேரே கண்டு வணங்கப் பெற்றேன்' என்று அருளிச்செய்தது. திருத்தாண்டகம் | ப. தொ. எண்: 287 | பதிக எண்: 74 |
திருச்சிற்றம்பலம் | 2819. | சொல்லானைப் பொருளானைச் சுருதி யானைச் | | | சுடராழி நெடுமாலுக் கருள் செய்தானை | | | அல்லானைப் பகலானை அரியான் தன்னை | | | அடியார்கட் கெளியானை அரண்மூன் றெய்த | | | வில்லானைச் சரம்விசயற் கருள்செய் தானை | | | வெங்கதிரோன் மாமுனிவர் விரும்பி யேத்தும் | | | நல்லானைத் தீயாடு நம்பன் தன்னை | | | நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே. | 1 |
1. பொ-ரை: சொல்லாகவும் பொருளாகவும் வேதங்களாகவும் திகழ்பவனும், ஒளிமிக் கசக்கராயுதத்தைத் திருமாலுக்கு அருளியவனும், இரவாகவும் பகலாகவும் இருப்பவனும், அன்பர் அல்லாதார்க்கு அரியனாகவும் அடியார்க்கு எளியனாகவும் இலங்குபவனும் அசுரர்க்கு அரணாயமைந்த திரிபுரங்கள் அழிய அம்பு எய்தவில்லினனும், விசயற்குப் பாசுபதம் அருளிய அருளாளனும், சூரியனும் பெருந்தவமுனிவர்களும் விரும்பிப் போற்றும் நல்லவனும், தீயாடு பவனும், விரும்புதற்குரிய தலைவனும் ஆகிய சிவபெருமானை நாரையூர் நன்னகரில் நான் கண்டேன்.
|