| 2822. | செம்பொன்னை நன்பவளந் திகழும் முத்தைச் | | | செழுமணியைத் தொழுமவர்தஞ் சித்தத் தானை | | | வம்பவிழும் மலர்க்கணைவேள் உலக்க நோக்கி | | | மகிழ்ந்தானை மதிற்கச்சி மன்னு கின்ற | | | கம்பனையெங் கயிலாய மலையான் தன்னைக் | | | கழுகினொடு காகுத்தன் கருதி யேத்தும் | | | நம்பனையெம் பெருமானை நாதன் தன்னை | | | நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே. | 4 |
4. பொ-ரை: செம்பொன், நற்பவளம், ஒளிமுத்து, செழுமணி என்றெல்லாம் ஒப்புக் கூறப்படுபவனும், வணங்குவார் சித்தத்தில் உறைபவனும், மணங்கமழும் மலர்களை கணைகளாகக் கொண்ட மன்மதன் இறக்கும் வண்ணம் விழித்து மகிழ்ந்தவனும், மதில் சூழ்ந்தகச்சியில் ஏகம்பனாய் மன்னுபவனும, கயிலாய மலையில்வாழும் எம் தலைவனும், சம்பாதி சடாயு என்ற கழுகுகளும் இராமனும் தமக்கு நன்மைதருவான் இவன் என்று ஆராய்ந்து வணங்கும் இறைவனும், எம்பெருமானும், தலைவனுமாகிய சிவபெருமானை நாரையூராம் நன்னகரில் நான் கண்டேன். கு-ரை: வம்பு அவிழும் - வாசனையோடு மலர்கின்ற. மலர்க்கணை வேள் - மன்மதன். உலக்க -அழியும்படி. மகிழ்ந்தது அவனது குற்றம் (சிவாபராதம்) நீங்கினமை குறித்து. மலையான் - மலையின் கண் உள்ளவன். "எம்" என்பது 'மலையான்' என்பதனோடு இயைந்தது. கழுகு, என்றது 'சம்பாதி, சடாயு' என்னும் இரண்டினையும். இவை பூசித்த தலம் புள்ளிருக்கு வேளூர் என்பது. "தள்ளாய சம்பாதி சடாயென்பார்தாமிருவர் புள்ளானார்க் கரையனிடம் புள்ளிருக்கு வேளூரே." (தி.2. ப.43. பா.1.) எனத் திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகளால் இனிதெடுத்து அருளிச்செய்யப் பெற்றது. காகுத்தன் - இராமன். 'நாரை வழிபாடு செய்த தலம் நாரையூர்' என்பது தெளிவாதலின், கழுகுகள் வழிபாடு செய்தமையையும், அக்கழுகுகள் இவை என்பதும், அவற்றது பெருமையும் இனிதுணர்த்தியருளுவார்காகுத்தன் வழிபட்டமையையும் உடன்
|