| 2823. | புரையுடைய கரியுரிவைப் போர்வை யானைப் | | | புரிசடைமேற் புனலடைத்த புனிதன் தன்னை | | | விரையுடைய வெள்ளெருக்கங் கண்ணி யானை | | | வெண்ணீறு செம்மேனி விரவி னானை | | | வரையுடைய மகள்தவஞ்செய் மணாளன் தன்னை | | | வருபிணிநோய் பிரிவிக்கும் மருந்து தன்னை | | | நரைவிடைநற் கொடியுடைய நாதன் தன்னை | | | நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே. | 5 |
நினைப்பித்தருளி, அஃறிணை உயிர்களும் வானிடத்தவர்களும் மண்மேல் அரன்றனை அருச்சித்துப் பயன்பெற, ஊனெடுத்து உழலும் ஊமர் ஒன்றையும் உணராது, வாணாள் வீணாள் கழித்தல் இரங்கத்தக்கதன்றோ என அறிவுறுத்தருளினார் என்க. திருக்கழுக்குன்றமும் கழுகுகள் வழிபடும் தலமாதல் அறியத்தக்கது. 5. பொ-ரை: உட்டொளை பொருந்திய கரத்தையுடைய யானையது தோலைப் போர்வையாகக் கொண்டவனும், முறுக்குண்ட சடையின்மேல் கங்கையைச் செறித்து வைத்தபுனிதனும், மணங்கமழும் வெள்ளெருக்கம் பூமாலையை அணிந்தவனும் வெள்ளிய நீறு செம்மேனியிடத்து விரவி விளங்குபவனும், பருவதராசன் மகள் தவம் செய்து அடையப்பெற்ற மணாளனும், வெள்ளிய விடையை உயர்த்திய நற்கொடியை உடைய தலைவனும் ஆகிய சிவபெருமானை நாரையூர் நன்னகரில்நான் கண்டேன். கு-ரை: புரை - கவிப்பு; யானையது உடலில் புரையாய் (கவிப்பாய்) அமைந்த உரிவை (தோல்) என்க. 'புரை உடைய கரி' என யானைக்கு அடையாக்கி, 'புரை - உயர்ச்சி அல்லது குற்றம்' எனலுமாம். 'அடைந்த - உட்செறித்த. விரை - வாசனை', 'மலைமகள் தவஞ்செய்து அடைந்த மணாளன்' என்க. 'செய்மணாளன்' என்னும் வினைத்தொகை, 'இது பயனாக' என்னும் பொருள்மேல் தொக்கது. பிணி நோய், உம்மைத்தொகை.நோய் - துன்பம். நரை - வெண்மை. 6. பொ-ரை: பிறவாமையானும், இறவாமையானும் புகழ் பெருகியவனும், பேய்களின் பாட்டிற்கேற்பக் கூத்தாடும் பித்தனும், தன்னை மறவாத மனத்திடத்தேமன்னி நிற்பவனும், மலையிடத்தும் கடலில் கண்ணும்
|