பக்கம் எண் :

1078
 
2824.பிறவாதும் இறவாதும் பெருகி னானைப்

பேய்பாட நடமாடும் பித்தன் தன்னை

மறவாத மனத்தகத்து மன்னி னானை

மலையானைக் கடலானை வனத்து ளானை

உறவானைப் பகையானை உயிரா னானை

உள்ளானைப் புறத்தானை ஓசை யானை

நறவாரும் பூங்கொன்றை சூடி னானை

நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.

6


வானின் மேலும் விளங்குபவனும், உறவும் பகையும் உயிரும் ஆகுபவனும், அகத்தும், புறத்தும் திகழ்பவனும், தேனிறைந்தகொன்றைப் பூவைச் சூடியவனும் ஆகிய சிவபெருமானை நாரையூராம் நன்னகரில் நான் கண்டேன்.

கு-ரை: "பெருகினான்" என்றதற்குமுன், 'புகழ்' என்னும் சொல்லெச்சம் வருவிக்க. 'பிறவாது, இறவாது' என்னும் வினையெச்ச மறைகள் காரணப்பொருளவாகலின், 'பிறவாமையாலும், இறவாமையாலும்புகழ் பெருகினான்' என உரைக்க. பிறத்தல் இறத்தல்களினின்றும் நீங்கி வீடு பெற்றாரது பெருமைதானே ஏனையோரது பெருமைகள் எல்லாவற்றினும் மேம்பட்டு விளங்கிநிற்குமாயின், இயல்பாகவே அவைகளை இல்லாதவனுக்கு உளதாகும் பெருமைமிகுதி சொல்ல வேண்டுவதோ என்பது திருக்குறிப்பு,வீடு பெற்றாரது பெருமையே. ஏனையெல்லாப் பெருமையினும் மேம்பட்டு விளங்கும் என்பதனை,

"இருமை வகைதெரிந் தீண்டறம்பூண்டார்

பெருமை பிறங்கிற் றுலகு"

(குறள் - 23)

என்பதனால் அறிக. இனி, 'கிணற்றுள் வீழ்ந்தாரை எடுக்கலுறுவார,் அதன் பொருட்டுத் தாமும் கிணற்றுள் வீழுமாறு போல, பிறவியுட்பட்டாரை எடுத்தற்பொருட்டுப் பிறவியில்லாத இறைவன் தானும் பிறவியுள் வீழ்வனாகலின், அஃது அவற்குப் புகழாவதல்லது இகழாமாறு இல்லை' என்பாரதுகூற்று, உவமப்போலியுடைத்து. எங்ஙனம் எனின், கிணற்றுட்கிடப்பார் இருவருள், மேல் எழமாட்டாது நீர்வயப்பட்டு அமிழ்ந்துவார் அதன் கண் அழுந்துவோரும், அவ்வாறன்றி மேலே மிதப்பார் அவரை எடுப்போருமாவர் என்பது தெளிவு; அங்ஙனமே உடம்புடைய இருவருள், 'அவிச்சை, வினை, மாயை' என்ற இவற்றின் வயப்பட்டு, 'முட்டை, வெயர்வை, விதை, கருப்பை' என்னும் நால்வகைத் தோற்றுவாய்களின் வழித்