| 2826. | அரிபிரமர் தொழுதேத்தும் அத்தன் தன்னை | | | அந்தகனுக் கந்தகனை அளக்க லாகா | | | எரிபுரியும் இலிங்கபுரா ணத்து ளானை | | | எண்ணாகிப் பண்ணா ரெழுத்தா னானைத் | | | திரிபுரஞ்செற் றொருமூவர்க் கருள்செய் தானைச் | | | சிலந்திக்கும் அரசளித்த செல்வன் தன்னை | | | நரிவிரவு காட்டகத்தி லாட லானை | | | நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே. | 8 |
8. பொ-ரை: மாலும் நான்முகனும் ஏத்தி வணங்கும் தந்தையும், இயமனுக்கு இறுதியை ஆக்கும்மகாசங்காரக் கடவுளும், அளந்தறிய இயலாத எரிப்பிழம்பாம் இலிங்கத்தினது இயல்புவிரிக்கும் இலிங்கபுராணத்து விளங்கித் தோன்றுபவனும், அருமைமிக்க எண்ணும் பண்ணும் எழுத்தும் ஆனவனும், திரிபுரங்களை அழித்து ஆண்டுத்தன்னை மறவாத மூவர்க்கும் அருள் செய்தவனும், சிலந்திக்குப்புவிபுரக்கும் அரசனாம் பேற்றையளித்த செல்வனும் ஏனை விலங்குகளொடு நரிகள் கலந்து திரியும் சுடுகாட்டில் ஆடுபவனும் ஆகிய சிவபெருமானை நாரையூராம் நன்னகரில்நான் கண்டேன். கு-ரை: அந்தகன் - அந்தத்தை (இறுதியை)ச்செய்பவன்; இயமன்; 'அவனுக்கு அந்தத்தைச் செய்பவன்' என்றதனால், 'மகா சங்காரக் கடவுள்' என்றவாறு. இனி, 'அந்தகாசுரனுக்கு அந்தத்தைச் செய்தவன்' என்றலுமாம். 'அளக்கலாகா இலிங்கம், எரிபுரியும் இலிங்கம்.எனத் தனித்தனி இயையும். "அளக்கலாகாமை, மாலும்அயனும் அடிமுடி தேடி அறியலாகாமையான் விளங்கும். இவ்வரலாற்றைக்கூறும் புராணமே இலிங்க புராணம். இது, சிவபிரானேமுதுற்பொருள் என நிறுவுதலையே பொருளாக உடைமையின், அதன்கண் இனிது விளங்கி நிற்பவன் என்பார். சிவபிரானை, "இலிங்க புராணத்துளான்" என்று அருளிச்செய்தார். இச்சிறப்பு நோக்கியே, சுவாமிகள், இலிங்கபுராணத்திருக்குறுந்தொகையை (தி.5. ப.95.) உலகிற்கு அருளிச்செய்து உதவினார் என்க. இப்புராணப் பொருளே. "பிரமன் அரிஎன் றிருவருந்தம் பேதைமையால் பரம மியாம்பரமம் என்றவர்கள் பதைப்பொடுங்க
|