| 2827. | ஆலாலம் மிடற்றணியா அடக்கி னானை | | | ஆலதன்கீழ் அறம்நால்வர்க் கருள்செய் தானைப் | | | பாலாகித் தேனாகிப் பழமு மாகிப் | | | பைங்கரும்பா யங்கருந்துஞ் சுவையா னானை | | | மேலாய வேதியர்க்கு வேள்வி யாகி | | | வேள்வியினின் பயனாய விமலன் தன்னை | | | நாலாய மறைக்கிறைவ னாயி னானை | | | நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே. | 9 |
அரனா ரழலுருவாய் அங்கே அளவிறந்து பரமாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ" எனத் திருவாசகத்துள் (தி.8 திருத்தோணோக்கம் -12) தொகுத்து அருளிச் செய்யப்பட்டது. இவ்வரலாற்றின்விரிவை, கந்த புராணம், அடிமுடி தேடு படலத்துள்விரித்துக் கூறிற்று. இது பற்றியே, சிவனடியாரை இகழவந்தவரும், அவர்கட்கு, "இலிங்கத் திட்டபுராணத்தீர்" (திரு வாய்மொழி 4. 10.5.) என இப்புராணத்தாற்பெயர் கொடுத்தார் என்க. எரி புரியும் -நெருப்பின் ஒளியை வீசும். இலிங்கம் - குறி; அது, கைகால் முதலிய உறுப்பின் பகுப்பு யாதும் அற்ற பொதுப்பிழம்பினைக் குறித்தது; 'தாணு' எனவும், 'கந்து' எனவும் வருவதும்இது, 'எண்ணும் எழுத்தும் ஆனானை' என்றாற்போலவே, 'பண் ஆனானை' என்பார், "பண் ஆரெழுத்தானானை" என்று அருளிச்செய்தார். "ஆரெழுத்து" என்புழிநின்ற, 'அருமை' என்பதனை, 'எண், பண்' என்பவற்றிற்குங்கூட்டுக. திரிபுரம் எரித்த ஞான்று மூவர்க்கு அருள்செய்தமையைமேலே (ப.60. பா.9 குறிப்புரை) காண்க. 9. பொ-ரை: ஆலால நஞ்சினைத்தன் கழுத்திற்கு அணியாகக் கொண்டு அதன் நச்சுத்தன்மையைக் கெடுத்தவனும், கல்லால மர நிழலில் அமர்ந்துசனகாதி முனிவர் நால்வருக்கும் அறமுரைத்தவனும், பாலும் தேனும் பழமும் பசிய கரும்பும் ஆகி அவற்றின் இனிய சுவையாய்ப் பயில்பவனும், மேன்மைமிக்க வேதியர்க்கு வேள்வியாய் விளங்குபவனும், வேள்வியின் பயனாய்விளை பவனும், குற்றமற்றவனும், நான் மறைகளாலும் இறைவனாகப் போற்றப்படுபவனும் ஆகிய சிவபெருமானை நாரையூராம் நன்னகரில் நான் கண்டேன்.
|