பக்கம் எண் :

1086
 

மேவினான் - விரும்பினான். "வெளி" என்றது ஆகுபெயராய், 'வெளிதாகிய நாரை செய்த வழிபாட்டை விரும்பினவன்' என்னும் பொருளையும் தோற்றுவித்தல்காண்க. மறையவன், மார்க்கண்டேயர். 'மாளற்பாலதாயமறையவன் உயிரை மாளாமை வைத்து, மாளாததாய வன்கூற்றின் உயிரை மாள வைத்தான் என்றது, அவனது எல்லா முதன்மையும் உடைமையை வியந்தருளிச் செய்தவாறு. இராவணனை, 'தூர்த்தன்' என்றல், பிறன்மனை நயந்தமைபற்றி. நாள் - வாழ்நாள்; "நீண்ட வாழ்நாள்" என்பது, எடுத்தோதியதனாற் பெறப்படும்.

திருநாவுக்கரசர் புராணம்

அப்பொழுதே அம்பலத்துள் ஆடுகின்ற

கழல்வணங்கி அருள்முன் பெற்றுப்

பொய்ப்பிறவிப் பிணியோட்டுந் திருவீதி

புரண்டுவலங் கொண்டு போந்தே

எப்புவனங் களும்நிறைந்த திருப்பதியின்

எல்லையினை இறைஞ்சி ஏத்திச்

செப்பரிய பெருமையினார் திருநாரை

யூர்பணிந்து பாடிச் செல்வார்.

தொண்டர்குழாம் புடைசூழத் தொழுதகரத்

தொடுநீறு துதைந்த கோலங்

கண்டவர்தம் மனங்கசிந்து கரைந்துருகுங்

கருணைபுறம் பொழிந்து காட்டத்

தெண்டிரைவாய்க் கல்மிதப்பில் உகைத்தேறுந்

திருநாவுக் கரசர் தாமும்

வண்டமிழால் எழுதுமறை மொழிந்தபிரான்

திருப்புகலி மருங்கு சார்ந்தார்.

-தி.12 சேக்கிழார்.