75. திருக்குடந்தைக் கீழ்க்கோட்டம் பதிக வரலாறு: திருநாவுக்கரசு சுவாமிகள் நல்லூரிறைவர் அருள் பெற்றுத் திருப்பழையாறை திருவலஞ்சுழி இவற்றைவணங்கித் திருக்குடமூக்கணைந்து தொழுது பாடியருளியது இத்திருப்பதிகம். திருக்குடமூக்கு, கும்பகோணம் என்றபெயரில் வழங்குகிறது. திருக்குடந்தைக் கீழ்க்கோட்டம் கும்பகோணத்திலுள்ள ஒரு கோயில். நாகேசுவர சுவாமிகோயில் என்ப. (தி.12 திருநாவு. புரா. 215) குறிப்பு: இத்திருப்பதிகம், 'போலும்' என்னும் முடிபுடைய தொடர்களால் இறைவன் பெருமையை வகுத்துரைத்து அருளிச் செய்தது. 'போலும்' என்பன அசைநிலையாகக்கொள்ளப்படும். திருத்தாண்டகம் | ப. தொ. எண்: 288 | பதிக எண்: 75 |
திருச்சிற்றம்பலம் | 2829. | சொன்மலிந்த மறைநான்கா றங்க மாகிச் | | | சொற்பொருளுங் கடந்த சுடர்ச் சோதி போலும் | | | கன்மலிந்த கயிலைமலை வாணர் போலுங் | | | கடல்நஞ்ச முண்டிருண்ட கண்டர் போலும் | | | மன்மலிந்த மணிவரைத்திண் தோளர் போலும் | | | மலையரையன் மடப்பாவை மணாளர் போலும் | | | கொன்மலிந்த மூவிலைவேற் குழகர் போலுங் | | | குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே. | 1 |
1. பொ-ரை: குடந்தைக் கீழ்க்கோட்டத்துத்திகழும் எம் கூத்தனார், சொல் வடிவாய் நிற்கும் நான்குமறைகளும் ஆறு அங்கங்களும் ஆனவரும், சொல்லையும் அதன் பொருளையும் கடந்த ஒளிப்பிழம்பாம் தன்மையரும், பக்க மலைகள் நிறைந்த கயிலை மலையில்வாழ்பவரும், கடலிடத்துத் தோன்றிய நஞ்சையுண்டுகறுத்த கழுத்தினரும், வலிமைமிக்க அழகிய மலைபோன்ற திண்ணிய தோளினரும், பருவதராசன் மகள்பார்வதியின் கணவரும், கொலைத் தொழில் பழகியமூவிலை வேலை ஏந்திய அழகரும் ஆவார்.
|