பக்கம் எண் :

1089
 
2830.கானல்இளங் கலிமறவ னாகிப் பார்த்தன்

கருத்தளவு செருத்தொகுதி கண்டார் போலும்

ஆனல்இளங் கடுவிடையொன் றேறி யண்டத்

தப்பாலும் பலிதிரியும் அழகர் போலும்

தேனலிளந் துவலைமலி தென்றல் முன்றிற்

செழும்பொழிற்பூம் பாளைவிரி தேறல் நாறுங்

கூனல்இளம் பிறைதடவு கொடிகொள் மாடக்

குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.

2


உண்டு; அவ்விடத்து, அப்பகுதிகள் முறையே, 'பன்னிருகலைப்பிராசாத மந்திரம்' எனவும், 'பதினாறுகலைப்பிராசாத மந்திரம்' எனவும், அவற்றை உன்னி உணரும்யோகம், பிராசாத யோகம்' எனவும் கூறப்படும். அவை எல்லாவற்றிற்கும் முதலாய் யாண்டும் யாவர்க்கும் உடனாய் நின்று உதவுவது இறைவனது திருவருளேயாகும். அத்திருவருள் ஒன்று தானே எண்ணிறந்த வகையில் அவரவர்க்கு ஏற்குமாற்றால் நின்று உதவும் வியட்டி நிலைகளையே இங்கு, "சுடர்" எனவும், அந்நிலைகள் அனைத்தையும் உடைய முதல்வன் தான் ஒருவனேயாய் நின்று நிலவுதலையே, இங்கு, "சோதி" எனவும் அருளிச்செய்தார் எனஉணர்க. இதனானே மெய்ந்நூல்களின் (தத்துவ சாத்திரங்களின்) பரப்புக்கள் அனைத்திற்கும் முதலாய் நிற்பன திருமுறைகள் என்பதும் தெற்றெனத் தெளிந்துகொள்க.

ஆகிக் கடந்த' என இயையும். மேற்கூறியனவெல்லாம் இனிது விளங்குதற் பொருட்டே, 'ஆகிக் கடந்தசுடர்ச்சோதி' என எச்சமாக்கி, ஒரு தொடர்ப்பட அருளிச் செய்தார். "சொற்பொருளும்" என்ற உம்மை, நுட்பத்தின் மிகுதியுணர நின்ற சிறப்பும்மை. வாணர், 'வாழ்நர்' என்பதன் மரூஉ; 'வாழ்பவர்' என்பது பொருள். 'சொற் பொருளுங் கடந்த நுண்ணியராயினும், உயிர்கள் பொருட்டுப் பரியராயும் விளங்கினார்' என்பார், 'கல் மலிந்த கயிலைமலை வாணர்" என அருளிச் செய்தார்; "கல்" என்றது, பக்க மலைகளை, 'மல் மலிந்த' (வலிமை நிறைந்த) 'அழகிய மலைபோலும் திண்ணிய தோள்களை உடையவர்' என்க. கொல் மலிந்த- கொல்லுதல் நிறைந்த. மூவிலை வேல் - சூலம். குழகர்- அழகர். இத்திருப்பதிகம் முழுவதும் இறைவனைச் சுவாமிகள், 'கூத்தன்' எனறே குறித்தருளுகின்றார்.

2. பொ-ரை: நல்லதேனின் சிறியதுளிகளை மிகுதியாக ஏந்தித் தென்றல் தவழும் முன்றிலின் கண்ணுள்ள பொழிலிடத்துப் பாளைகள்