பக்கம் எண் :

1090
 
2831.நீறலைத்த திருவுருவும் நெற்றிக் கண்ணும்

நிலாஅலைத்த பாம்பினொடு நிறைநீர்க் கங்கை

ஆறலைத்த சடைமுடியும் அம்பொன் தோளும்

அடியவர்க்குக் காட்டியருள் புரிவார் போலும்

ஏறலைத்த நிமிர்கொடியொன் றுடையர் போலும்

ஏழுலகுந் தொழுகழலெம் மீசர் போலும்

கூறலைத்த மலைமடந்தை கொழுநர் போலுங்

குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.

3


விரிதலால் துளிக்கும் தேனின் மணம் கமழப்பெறுவனவும், வளைவு பொருந்திய இளம்பிறையைத் தடவும்துகிற் கொடிகளைக் கொண்டவனும் ஆகிய, மாடங்களை உடைய குடந்தைக் கீழ்க்கோட்டத்துத் திகழும் எம்கூத்தனார், காட்டில் எழுச்சிமிக்க நல்லிள வேட்டுவன் ஆகி விசயனுடைய ஊக்கத்தின் அளவினையும் விற்றொழிலின் பயிற்சி முழுவதையும் அறிந்தவரும், விரைந்து நடக்கும் நல்லிள ஆனேற்றை ஊர்ந்து இந்நிலவுலகிற்கு அப்பாலும் பிச்சைக்கொள்ளத் திரியும் அழகரும் ஆவார்.

கு-ரை: கான் - காட்டில், 'நல்இளங்கலி மறவன் ஆகி' என்க. கலி - எழுச்சி. மறவன் -வேட்டுவன். "கருத்து" என்றது, ஊக்கத்தை. செரு -போர். விற்றொழிலில் அவன் பயின்ற அனைத்தையும் காட்டச்செய்தார் ஆகலின், "செருத்தொகுதி" என்று அருளினார். 'கருத்தளவையும், செருத்தொகுதியையும்கண்டார்' என்க. 'ஆன் விடை' என இயையும். "அண்டம்" என்றது, நில அண்டத்தை. 'அதற்கு அப்பாலும் திரிவர்' என்றது, 'ஏனைய நீர் அண்டம் முதலியவற்றுள் உள்ளார்க்கும் இவ்வாறே அருள்செய்வார்' என்றருளியதாம்.

'தேன் துவலை' என இயையும்; இளமை, இங்குச்சிறுமை மேல் நின்றது. துவலை - துளி. 'துவலை மலிதல்', தென்றலுக்குஅடை. "தேறல்" என்றது மாடங்களில் உள்ளார்பருகும் தேனினை. "கூன் நல் இளம் பிறை தடவு" என்றது, கொடிக்கு அடை. 'தென்றல் இயங்கும் முன்றிலின் கண்உள்ள பொழிலிடத்துப் பாளைகள் விரியப்பெறுவனவும், உண்ணப் படும் தேனினது மணம் வீசப்பெறுவனவும், பிறையைத்தடவும் கொடிகளைக் கொண்டனவும் ஆகிய மாடங்களையுடைய குடந்தை' என்க.

3. பொ-ரை: குடந்தைக் கீழ்க்கோட்டத்துத் திகழும் எம் கூத்தனார் திருநீறுபொருந்திய தம் திருவுருவத்தையும், நெற்றிக் கண்ணினையும்,