| 2832. | தக்கனது பெருவேள்வி தகர்த்தார் போலுஞ் | | | சந்திரனைக் கலைகவர்ந்து தரித்தார் போலுஞ் | | | செக்கரொளி பவளவொளி மின்னின் சோதி | | | செழுஞ்சுடர்த்தீ ஞாயிறெனச் செய்யர் போலும் | | | மிக்கதிறல் மறையவரால் விளங்கு வேள்வி | | | மிகுபுகைபோய் விண்பொழியக் கழனி யெல்லாங் | | | கொக்கினிய கனிசிதறித் தேறல் பாயுங் | | | குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே. | 4 |
பிறையொடு பாம்பும் நீர் நிறைந்த கங்கையும் பொருந்திய சடைமுடியையும், அழகிய பொன்நிறத் தோள்களையும் அடியவர்க்குக் காட்டி அருள்புரிவாராய், இடபம் பொறித்த கொடியை உயர்த்தியவராய், ஏழுலகங்களும் வணங்கும் திருவடிகளை உடைய ஈசராய்த் தம் இடப்பங்காய் இடம் பெற்ற மலைமகட்குக் கொழுநராயும் திகழ்பவர். கு-ரை: 'வருந்திய' எனப்பொருள்தரும் 'அலைத்த' என்னும் சொல், ஈண்டுப் பலவிடத்தும் 'பொருந்திய' என்னும் அளவாய் நின்றது. நீறலைத்த திருவுரு என்பது முதலாக, "அம்பொன் தோள்" என்பது ஈறாக உள்ளவற்றை எடுத்தோதி, 'அவைகளை அடியவர்க்குக் காட்டிஅருள்புரிவார்' என்று அருளிச்செய்தது, மெய்யுணர்வு தோன்றப்பெறும் செவ்வி பெற்று அதனை அவாவி நிற்கும் நன்மாணாக்கர்க்கு அதனை ஒருவார்த்தையால் உணர்த்தியருளும் உறுதிச் சொல்லாய் நின்று பயன் தருவதாதல் காண்க.நிமிர் - உயர்ந்த. 4. பொ-ரை: வேதவழி ஒழுகுதலில்மிக்க வன்மையுடைய மறையவராய் விளக்கம் பெறும்வேள்வியிடத்து எழும் மிகு புகை விண்ணிடத்துப்போய் மழையைப் பெய்விக்க, கழனிகளில் மாமரத்தினுடைய இனிய கனிகள் சிதற அவற்றின் சாறு பரவிப் பாயும்குடந்தைக் கீழ்க் கோட்டத்துத் திகழும் எம் கூத்தனார், தக்கனது பெருவேள்வியை அழித்தவரும், சந்திரனை ஒற்றைக்கலையுடன் கைப்பற்றித் தலையில் தரித்துக்காப்பாற்றியவரும், செவ்வானொளி, பவளஒளி, மின்னொளி, கொழுவிய சுடர்த்தீயொளி, ஞாயிற்றொளி, ஆகிய எல்லா ஒளியும் ஒருங்கு கலந்தாற்போன்ற செம்மை நிறம் உடையவரும் ஆவார். கு-ரை: "கவர்ந்து" என்றது ஈண்டு, 'கைக்கொண்டுகாத்து என்னும்
|