| 2833. | காலன்வலி தொலைத்தகழற் காலர் போலுங் | | | காமனெழில் அழல்விழுங்கக் கண்டார் போலும் | | | ஆலதனில் அறம்நால்வர்க் களித்தார் போலும் | | | ஆணொடுபெண் ணலியல்ல ரானார் போலும் | | | நீலவுரு வயிரநிரை பச்சை செம்பொன் | | | நெடும்பளிங்கென் றறிவரிய நிறத்தார் போலுங் | | | கோலமணி கொழித்திழியும் பொன்னி நன்னீர்க் | | | குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே. | 5 |
பொருட்டாய் நின்றது. 'தக்கனது சாபத்தால் தேய்ந்தொழிந்த ஏனைக்கலைகள் போல இவ்வொருகலையும் ஒழியாதவாறு கைப்பற்றிக்காத்துப் பின் சடையில் தரித்தார்' என்க. சந்திரனைக் கலைகவர்ந்து என்றதனை 'குடும்பத்தைக் குற்றம்மறைப்பான்' (குறள். 1029) என்பது போலக்கொள்க. சந்திரனைக் காத்ததும். தக்கனுக்கு மாறாயசெயலேயாதல் அறிக. செக்கர் - செவ்வானம், 'செக்கர்ஒளி முதலாக ஞாயிற்றின் ஒளிஈறாக உள்ள அனைத்தொளியும்ஒருங்கு கலந்தாற் போலும் செம்மை நிறம் உடையவர்' என, அவரது திருமேனிப் பொலிவினை வியந்தருளிச்செய்தார். 'தீ, ஞாயிறு' என்றனவும், அவற்றின் ஒளியையே என்க. திறலாவது, வேதம் முதலிய கலைகளை ஓதுதலினும் ஒழுகுதலினும் உள்ள வன்மை, வேள்வி வேட்டலால் பருவமழை பொய்யாது பெய்தல் பற்றியும், வேள்விப் புகை உருவத்தால் மேகத்தோடு ஒத்திருத்தல் பற்றியும்'அவ்வேள்விப் புகைதானே விண்ணிற் போய் மேகமாய்நின்று மழை பொழியும்' என, தற்குறிப்பேற்றமாக அருளிச்செய்தார். 'விண் போய்' என இயைக்க. 'விண்ணாய்ப்பொழிய' என ஆக்கம் வருவித்து, 'விண் - மேகம்' என்றலுமாம். கொக்கு - மாமரம். "சிதறி" என்றதனை, 'சிதற' எனத் திரிக்க. 'தேறல்' என்றது, மாம்பழத்தின் சாற்றினை. 5. பொ-ரை: அழகிய அரதனங்களைக்கரையில் ஒதுக்கி, மலையினின்று இறங்கிவரும் காவிரியின் நன்னீரால் சிறப்புமிகும் குடந்தைக் கீழ்க்கோட்டத்துத்திகழும் எம் கூத்தனார், இயமனது ஆற்றலையழித்ததும், கழல் அணிந்ததும் ஆகிய காலை உடையவரும், மன்மதனது அழகிய உடலை அழல் உண்ணும் வண்ணம் நுதற் கண்ணைவிழித்து நோக்கியவரும், சனகாதி முனிவர் நால்வர்க்கும், கல்லாலின் கீழ் அமர்ந்து அறம் உரைத்தருளியவரும், ஆண் பெண் அலிகளின் அல்லராம் தன்மை உடையவரும், நீலமணி, வரிசைப் படப்பதித்தற்குரிய வயிரம், பச்சை, செம்பொன், நீடு பளிங்கு என்றிவற்றுள் இன்னது ஒன்றுபோலும் நிறத்தினர் என உணர ஒண்ணாததொரு நிறமுடையவரும் ஆவார்.
|