| 2834. | முடிகொண்ட வளர்மதியும் மூன்றாய்த் தோன்றும் | | | முளைஞாயி றன்னமலர்க் கண்கள் மூன்றும் | | | அடிகொண்ட சிலம்பொலியும் அருளார் சோதி | | | அணிமுறுவற் செவ்வாயும் அழகாய்த் தோன்றத் | | | துடிகொண்ட இடைமடவாள் பாகங் கொண்டு | | | சுடர்ச்சோதிக்கடிச்செம்பொன்மலைபோலிந்தாள் | | | குடிகொண்டென் மனத்தகத்தே புகுந்தார் போலுங் | | | குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே. | 6 |
கு-ரை: 'எழிலை அழல் விழுங்க' என்க. கண்டார் - நோக்கினார்; நோக்கியது நெற்றிக்கண்ணால் என்க. "ஆல்" என்றது, அதன் நிழலைக் குறித்தது. அல்லர் ஆனார் - அல்லராம் தன்மையை உடையவராயினார். "உரு" என்றது, மணியை, நிரை - வரிசைப்படப் பதித்தற்கு உரிய. 'நிறை பச்சை' எனப் பாடம் ஓதுதல் சிறக்கும். 'நவ மணிகளும், பொன்னும், பளிங்கும் ஆகிய இவற்றுள் இன்னதன் நிறம்போலும் நிறத்தினர் என உவமையானும் உணர ஒண்ணாததொரு நிறமுடையவர்' என்றபடி. கோலம் -அழகு. 6. பொ-ரை: குடந்தைக் கீழ்க்கோட்டத்துத்திகழுமெம் கூத்தனார், முடியினிடத்தே வளர்மதியைத் தரித்தவராய், மூன்றாய் எழுந்து தோன்றும் இளஞாயிறுகள் என்னத் தக்க மலர்க்கண்கள் மூன்றுடையவராய், பாதத்தில்கட்டப்பட்டொலிக்கும் சிலம்பினராய், அருள் நிறைந்து ஒளிமிக்க வரிசையான பற்களுடன் அழகிதாய் விளங்கும் செவ்வாயினராய், உடுக்கை போன்ற இடுப்பினை உடைய உமையம்மையை இடப்பங்காய்க் கொண்டவராய், ஒளிப்பிழம்பாய் விளக்கம் மிக்க செம்பொன்மலை போன்றவராய், இந்நாள் என் மனத்திடத்தே புகுந்துகுடிகொண்டவர் ஆவார். கு-ரை: 'மூன்றாய்த் தோன்றுங்கண்கள்' என இயையும். 'முளைஞாயிறு அன்ன" என்றது தொழில்பற்றி வந்த உவமை; "மூன்று கண்கள் யாதொன்று திறப்பினும்சிறிது திறத்தலே யன்றி முழுவதூஉம் திறப்பின்உலகம் ஆற்றுமாறில்லை' என அவற்றது ஆற்றல் மிகுதியை உணர்த்தியருளியவாறு. 'அன்ன ஆற்றலை உடையவாயினும், மென்மையிற் பிறழா' என்பார், "மலர்க்கண்கள்" என்று அருளினார். "அருள் ஆர், சோதி, அணி" என்னும்
|