பக்கம் எண் :

1094
 
2835.காரிலங்கு திருவுருவத் தவற்கும் மற்றைக்

கமலத்திற் காரணற்குங் காட்சி யொண்ணாச்

சீரிலங்கு தழற்பிழம்பிற் சிவந்தார் போலுஞ்

சிலைவளைவித் தவுணர்புரஞ் சிதைத்தார் போலும்

பாரிலங்கு புனல்அனல்கால் பரமா காசம்

பரிதிமதி சுருதியுமாய்ப் பரந்தார் போலும்

கூரிலங்கு வேற்குமரன் தாதை போலுங்

குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.

7


மூன்றும் "முறுவல்" என்றதனோடு தனித்தனிமுடியும். 'நிறைந்த அருளைப் புலப்படுத்துவதாயும், தண்ணிய ஒளியினையுடையதாயும் நின்று, இயல்பானே அழகியதாகிய முகத்திற்குப் பின்னும் பேரழகினைச் செய்வதாகியமுறுவல்' என்றருளியவாறு. 'இத்தகைய முறுவலோடு கூடிய சிவந்தவாயினது அழகு சொல்ல ஒண்ணாததாய் நிற்கும்' என்பார். "அணிமுறுவற்செவ்வாய்" என்று அருளினார். சுடர்ச் சோதி - கதிர்களின் திரட்சியாகிய ஒளிப்பிழம்பு. கடி - விளக்கம்."சோதி" முதலிய மூன்றும் மலைக்கு அடை. இங்ஙனம் முடிகொண்ட வளர்மதி முதலியவற்றை வகுத்துப் புகழ்ந்து, "குடிகொண்டென் மனத்தகத்தே புகுந்தார்" என்று அருளிய இதனால், சுவாமிகளுக்குச் சிவபிரானது திருமேனிக்காட்சியால் விளைந்த பேரின்ப மேலீடு தெள்ளிதிற்புலனாகும். இவ்வருமைத் திருத்தாண்டகத்தை,

"முடிகொண்ட மத்தமும் முக்கண்ணின் நோக்கும்

முறுவலிப்பும்

துடிகொண்ட கையும் துதைந்தவெண் ணீறும்

சுரிகுழலாள்

படிகொண்ட பாகமும் பாய்புலித் தோலும்என்

பாவிநெஞ்சிற்

குடிகொண்ட வாதில்லை யம்பலக் கூத்தன்

குரைகழலே."

என்னும் திருவிருத்தத்தோடு உடன்வைத்து உணர்க. (தி.4.ப.81. பா.7.)

7. பொ-ரை: குடந்தைக் கீழ்க்கோட்டத்துத்திகழும் எம் கூத்தனார் மேகம் போல விளங்கும் அழகிய உருவத்தையுடைய திருமாலுக்கும்,