| 2836. | பூச்சூழ்ந்த பொழில்தழுவு புகலூ ருள்ளார் | | | புறம்பயத்தார் அறம்புரிபூந் துருத்தி புக்கு | | | மாச்சூழ்ந்த பழனத்தார் நெய்த்தா னத்தார் | | | மாதவத்து வளர்சோற்றுத் துறையார் நல்ல | | | தீச்சூழ்ந்த திகிரிதிரு மாலுக் கீந்து | | | திருவானைக் காவிலோர் சிலந்திக் கந்நாள் | | | கோச்சோழர் குலத்தரசு கொடுத்தார் போலும் | | | குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே. | 8 |
படைப்பிற்குக் காரணராய்த் தாமரை மலரில்விளங்கும் பிரமனுக்கும் காண முடியாதபடி புகழ் நிலவும்நெருப்புப்பிழம்பு உருவத்தில் சிவந்து காணப்பட்டவரும், மலையை வில்லாக வளைத்து அசுரருடைய முப்புரங்களையும் அழித்தவரும், விளங்கும் நிலம், நீர், தீ, காற்று மேம்பட்ட ஆகாயம், சூரியன் சந்திரன், சுருதி என்றிவையாய்ப் பரவி நின்றவரும், கூர்மையுடன் திகழும் வேலையுடைய குமரனுக்குத் தந்தையானவரும் ஆவார். கு-ரை: கார் இலங்கு திருஉருவத்தவன்- மேகம்போல விளங்கும் அழகிய உருவத்தை யுடையவன்; திருமால், கமலத்தில் காரணன் - தாமரை மலரில் இருக்கும் தலைவன்; பிரமன். காட்சி ஒண்ணா - காணுதல் கூடாத. சீர் - புகழ்; 'சீர்ப் பிழம்பு' என இயையும். பிழம்பின் - பிழம்புருவத்தில். சிவந்தார் - சிவப்புநிறமாயினார். "பார்" என்றது, "புனல்" என்றதனோடு எண்ணுநிலை வகையான் இயைந்தது. "பரமாகாசம்" என்றது, 'ஏனைய பூதங்களின் மேம்பட்டதாகிய ஆகாசம்" என்றபடி. "சுருதி" என்றது இசையை. பரந்தார் -பரவிநின்றார். 8. பொ-ரை: குடந்தைக் கீழ்க்கோட்டத்துத் திகழும் எம் கூத்தனார் பூக்கள் பரவிய பொழிலால் தழுவப்பட்ட புகலூரில் உள்ளவரும், புறம்பயத்தில் உறைபவரும், அறத்தை மக்கள் விரும்பி மேற்கொள்ளும் பூந்துருத்தியில் புக்கவரும், வண்டுகள் சூழ்ந்தபழனத்தை விரும்பிக் கொண்டவரும், நெய்த்தானத்து நிலைத்தவரும், சிறந்த தவஞ்செய்தற்கு ஏற்றசோற்றுத்துறையைப் போற்றிக் கொண்டவரும், தீயைப் போன்ற ஒளியை உமிழும் சக்கராயுதத்தைத் திருமாலுக்கு ஈந்தவரும், திருவானைக்காவில் தொண்டுசெய்த ஒப்பற்ற சிலந்திக்கு மேம்பட்ட சோழர்குடிக்குரிய அரசாட்சியை அந்நாள் கொடுத்தவரும் ஆவார். கு-ரை: இத்திருத்தாண்டகம், இறைவன் ஏனைய பல தலங்களிலும்
|