பக்கம் எண் :

1096
 
2837.பொங்கரவர் புலித்தோலர் புராணர் மார்பிற்

பொறிகிளர்வெண் பூணூல் புனிதர் போலும்

சங்கரவக் கடன்முகடு தட்ட விட்டுச்

சதுரநடம் ஆட்டுகந்த சைவர் போலும்

அங்கரவத் திருவடிக்காட் பிழைப்பத் தந்தை

அந்தணனை அறஎறிந்தார்க் கருளப் போதே

கொங்கரவச் சடைக்கொன்றை கொடுத்தார் போலும்

குடந்தைக்கீழ்க் கேட்டத்தெங் கூத்த னாரே.

9


எழுந்தருளியிருக்கும் நிலையை நினைந்து அருளிச் செய்தது. புகலூர், புறம்பயம், பூந்துருத்தி, பழனம், நெய்த்தானம், திருவானைக்கா அனைத்தும் சோழநாட்டுத் தலங்கள்.

மாச் சூழந்த - (மலர்களின் மிகுதியால்) வண்டுகள் சூழ்ந்த. 'மா தவத்துச் சோற்றுத்துறை' என்க. 'சிறந்த தவத்திற்கு உரிய' என்பது பொருள். தீச்சூழ்ந்த - தீப்போன்ற ஒளியையுடைய. திகிரி - சக்கரம். "ஈந்து" என்னும் வினையெச்சம், எண்ணின்கண் வந்தது. திருவானைக்காவில் வாய்நூலாற் பந்தர் அமைத்த சிலந்தியைச் சோழ மன்னனாக்கிய வரலாற்றை, சேக்கிழார் நாயனார், கோச்செங்கட் சோழநாயனார் புராணத்துள் விரித்துரைத்தருளினார்.

9. பொ-ரை: குடந்தைக் கீழ்க்கோட்டத்துத்திகழும் எம் கூத்தனார் சினம் மிகும் பாம்பை அணிந்தவரும், புலித்தோலை உடுத்தவரும், பழமையானவரும், உத்தம இலக்கணமாகிய பொறிகள் (மூன்று வரிகள்) விளங்கும்மார்பிடத்து வெள்ளிய பூணூலைத் தரித்த புனிதரும், சங்குகள் வாழ்வதும் ஒலியுடையதும் ஆகிய கடல் அண்டமுகட்டில் சென்று மோதுமாறு கைகளை வீசித் திறம்படநடனமாடும் அநாதிசைவரும், கழலும், சிலம்பும் கிடந்து ஒலிக்கும் திருவடிக்கு ஆளாதலில் தவறியதனால், தந்தையாகிய அந்தணனைத் தாளிரண்டும் வெட்டுண்டு வீழ மழுவினாலெறிந்தசண்டேசருக்கு அப்பொழுதே அரவம் தவழும் சடை முடியிடத்துத் திகழும் கொன்றை மாலையைக் கொடுத்தவரும் ஆவார்.

கு-ரை: பொங்கு அரவர் - மிக்கபாம்பை அணிந்தவர். பொறி - ஒளி. 'புரி கிளர்' எனப்பாடம் ஓதுதல் சிறக்கும். 'சங்குக் கடல், அரவக்கடல்' எனத் தனித்தனி இயைக்க. அரவம் - ஓசை, முகடு -அண்ட முகடு. சதுர நடம் - திறல் வாய்ந்த நடனம்; இதனை 'காளியோடு ஆடி வென்ற நடனம்'