| 2838. | ஏவியிடர்க் கடலிடைப்பட் டிளைக்கின் றேனை | | | யிப்பிறவி யறுத்தேற வாங்கி யாங்கே | | | கூவிஅம ருலகனைத்து முருவிப் போகக் | | | குறியிலறு குணத்தாண்டு கொண்டார் போலும் | | | தாவிமுதற் காவிரிநல் யமுனை கங்கை | | | சரசுவதிபொற் றாமரைபுட் கரணி தெண்ணீர்க் | | | கோவியொடு குமரிவரு தீர்த்தஞ் சூழ்ந்த | | | குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே. | 10 |
என்க. ஆட்டு - ஆடுதல்; முதனிலை திரிந்த தொழிற்பெயர். 'கடலின் நீரை அண்ட முகட்டைப் பொருந்துமாறு எழுப்பிவிடும் வகையில் நிலம் அதிர நடம் ஆட்டுகந்தவர்' என்க. சைவர்- சிவ (மங்கல) சம்பந்தம் உடையவர்; சிவபிரானை, 'அனாதிசைவர்' என்னும் மரபும் உண்டு. அரவத் திருவடி - கழல், சிலம்பு இவைகளின் ஒலி பொருந்திய திருவடி. ஆள்பிழைப்ப - ஆளாதலில் தவறியதனால்; என்றது, 'குற்றம்செய்தமையால்' என்றபடி. குற்றம், ஆட்டுதற்கு வைத்திருந்த ஆன்பாற் குடத்தைக் காலால் இடறியது; பிறிது குற்றமும் உண்டு. 'தந்தையாகிய அந்தணனை' என்க. அற - தாள் இரண்டும் வெட்டுண்டு விழும்படி. எறிந்தார் - மழுவினால் எறிந்தவர்; சண்டேசுர நாயனார். 'அப்போதே அருளும் கொன்றையும் கொடுத்தார்' என்க. 'கொங்குக் கொன்றை, சடைக்கொன்றை' என இயைக்க. கொங்கு - வாசனை. அரவச்சடை - பாம்பணிந்தசடை. இவ்வரலாற்றின் விரிவைத் திருத்தொண்டர்புராணத்துள், சண்டேசுர நாயனார் புராணத்திற் காண்க. திருமுறைகளுள் இவ்வரலாறு வந்துள்ள பிற இடங்களை நோக்கின், 'எறிந்தாற்கு' என்பதே பாடமாதல் வேண்டும் எனக்கருதலாகும். 10. பொ-ரை: முதன்மை பொருந்தியகாவிரி, நல்யமுனை, கங்கை, சரசுவதி, பொற்றாமரை, பிற தாமரைத் தடாகங்கள், தெளிநீர்க் கிருட்டிணை, குமரி ஆகிய தீர்த்தங்கள் தாவிவந்து சூழ்ந்த குடந்தைக் கீழ்க்கோட்டத்துத் திகழுமெம் கூத்தனார், என்வினைக்கு ஈடாகத் தம்மால் செலுத்தப்பட்டுத் துன்பக்கடலில் வீழ்ந்து துன்புறுகின்ற என்னைக் கூவிக் கரை ஏறும்படிஎடுத்து, இப்பிறவியை அறுத்து யான் விண்ணவர் உலகம் எல்லாவற்றையும் தாண்டித் தமது சிவலோகத்தில் சென்றுசேரும்படி, மாயை கலவாத தம் அருட்குணம் ஆறனுள்ளும்படுத்து என்னை ஆட்கொண்டவர் ஆவார். கு-ரை: ஏவி தம்மால் (இறைவரால் வினைக்கீடாகச்) செலுத்தப்பட்டு,
|