பக்கம் எண் :

1099
 
மறிகொண்ட கரதலத்தெம் மைந்தர் போலும்

மதிலிலங்கைக் கோன்மலங்க வரைக்கீழிட்டுக்

குறிகொண்ட இன்னிசைகேட் டுகந்தார் போலும்

குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.

11

திருச்சிற்றம்பலம்


செறிந்து நிற்பார் சிந்தையில் தித்திக்கும் சிவலோகத்து அமுதம் ஆவாரும், நெறித்த கூந்தலையுடையஉமை ஒருபாகமாக இருக்க, அமரர் கூட்டம் வணங்க, எல்லாநலனும் நிரம்பப்பெற்றுத் திகழ்ந்தவரும், மான்கன்றைத்தம் கரத்தில் ஏந்திய எம் வலியரும், மதிற்காவல்மிக்க இலங்கையிறை கருத்தழியுமாறு மலைக்கீழ் இட்டு அவனை ஒறுத்துப் பின் இலக்கணம் அமைந்த அவன் இசையைக் கேட்டு விருப்புற்று அவனுக்கு நலம்பல நல்கினவரும் ஆவார்.

கு-ரை: செறிகொண்ட சிந்தை -ஒன்றுதல் கொண்ட மனம். தெளிந்து - விளங்கி. தேறி- முடிந்த பயனாய் நின்று. 'தித்திக்கும் அமுதம்' எனஇயையும். வாயளவில் தித்திக்கும் தேவர் உலகத்து அமுதத்தின் நீக்குதற்கு, "சிவபுவனத்து அமுதம்" என்று அருளினார். புவனம் - உலகம். 'சிவபவனத்து' என்பதும் பாடம்.

நெறிகொண்ட குழல் - நெறிப்பைக் (வளைவைக்) கொண்ட கூந்தல். பாகம் ஆக - ஒரு பாகத்தாளாய்இருக்க.

நிறைந்து - எல்லா நலனும் நிரம்பப்பெற்று. 'நிறைந்து நின்றார்' என இயையும். 'பாகமாகி' எனப்பாடம் ஓதி, 'நிறைந்து வணங்க' என்று இயைத்துரைத்தல் சிறக்கும். மறி - மான் கன்று. குறி - இசையின் இலக்கணம்.