76. திருப்புத்தூர் பதிக வரலாறு: வாகீசர், திருப்பூந்துருத்தியில் வீற்றிருக்கும் நாள்களில் பாண்டி நாட்டில் சைவந்தழைக்கச் செய்து மீண்டுவந்த திருஞான சம்பந்தரால் பாண்டிநாட்டின் பெருமையறிந்து ஆங்குச் செல்லவிரும்பி விடைபெற்றுத் தென்திசையே போகும் பொழுது புத்தூர் பணிந்து பாடியருளியது இத்திருப்பதிகம். (தி.12 திருநாவு. புரா. 402) குறிப்பு: இத்திருப்பதிகம், 'காண் என்னும் முடிபுடைய தொடர்களால் இறைவனது பெருமைகளை வகுத்துணர்த்தி, 'அத்தகையோன் என் சிந்தையின்கண் உள்ளவனே ஆயினான்' என அருளிச் செய்தது. திருத்தாண்டகம் | ப. தொ. எண்: 289 | பதிக எண்: 76 |
திருச்சிற்றம்பலம் | 2840. | புரிந்தமரர் தொழுதேத்தும் புகழ்தக் கோன்காண் | | | போர்விடையின் பாகன்காண் புவன மேழும் | | | விரிந்துபல வுயிராகி விளங்கி னான்காண் | | | விரைக்கொன்றைக் கண்ணியன்காண் வேதம் நான்கும் | | | தெரிந்துமுதற் படைத்தோனைச் சிரங்கொண்டோன்காண் | | | தீர்த்தன்காண் திருமாலோர் பாகத் தான்காண் | | | திருந்துவயல் புடைதழுவு திருப்புத் தூரில் | | | திருத்தளியான் காண்அவனென் சிந்தை யானே. | 1 |
1. பொ-ரை: தேவர்கள் விரும்பித்துதித்து வணங்கும் புகழுக்கு உரியவனும், போர்த்தொழில்வல்ல இடப ஊர்திக்குத் தலைவனும், உலகங்கள் ஏழுமாகிப்பல உயிரும் ஆகி விளங்கியவனும், மணமிக்க கொன்றைக் கண்ணியை உடையவனும், வேதம் நான்கையும் உணர்ந்து முற்படப் படைப்புத் தொழிலை மேற்கொண்ட பிரமனதுசிரத்தைக் கொய்தவனும், குற்றமற்றவனும், திருமாலைஒரு பாகமாகக் கொண்டவனும் ஆகிப் பண்படுத்தப் பட்டவயல்கள் நாற்புறமுஞ் சூழ விளங்கும் திருப்புத்தூர்த்திருத்தளியில் திகழுஞ் சிவபெருமான் என்சிந்தையில் என்றும் நீங்காமல் நிற்பவன் ஆவான்.
|