பக்கம் எண் :

1101
 
2841.வாராரும் முலைமங்கை பாகத் தான்காண்

மாமறைக ளாயவன்காண் மண்ணும் விண்ணுங்

கூரார்வெந் தழலவனுங் காற்றும் நீருங்

குலவரையும் ஆயவன்காண் கொடுநஞ் சுண்ட


கு-ரை: புரிந்து - விரும்பி. 'அமரர்புரிந்து தொழுதேத்தும்' என மாற்றியுரைக்க. "புகழ்தக்கோன்" புகழப்படுதற்கு உரியவன்அவன் ஒருவனே' என்றவாறு; "பூமிமேல் புகழ்தக்கபொருளே" (ப.95 பா.7) எனப் பின்னர் வருவதுங் காண்க. ஏனையோரது புகழ் எல்லாம் பொருள் சேராதனவாய் ஒழிய,இறைவனது புகழே பொருள்சேர் புகழாதல் பற்றி, அவன் ஒருவனே புகழப்படுதற்கு உரியனாயினான் என உணர்க. விடையின் பாகன் - இடப ஊர்திக்குத் தலைவன். "உயிராகி" என்பதில் உள்ள, "ஆகி" என்பதனை "புவனம் ஏழும்" என்பதனோடுங் கூட்டுக. விரை - வாசனை. முதல்- காத்தல் அழித்தல்களுக்கு முன்னர். படைத்தோன் -உலகத்தைப் படைத்தவன்; பிரமன்; 'வேதம் நான்கும் தெரிந்தும், முதற்கண் உலகைப் படைத்தமைபற்றி உலகத் தோற்றத்திற்குத் தன்னையே முதல்வனாக மயங்கி, அதனால் தலை ஒன்றை இழந்தான்' என்பார், "வேதம்நான்கும் தெரிந்து முதற் படைத் தானைச் சிரங்கொண்டோன்" என்று அருளிச் செய்தார். தீர்த்தன் - முனிவன். 'சிரங்கொண்டானாயினும் கொல்லாமையுடைய முனிவனே' என்றவாறு. திருமால் ஓர்பாகத்தில் உடையனாதல் மேலே (ப.58. பா.3) காட்டப்பட்டது; அவ்வாறின்றி "அரியலால் தேவி யில்லை ஐயன் ஐயாறனார்க்கே" (தி.4. ப.40. பா.5) என அருளிச் செய்தவாறு, 'திருமாலையும் தனது சத்திகளுள் ஒரு சத்தியாகக் கொண்டு ஒரு பாகத்தில் உடையவன்' என்று உரைத்தலுமாம். 'சிவபிரானது சத்தி ஒன்றே செயலாற்றுதற்கண் நான்காய்ப் பிரிந்துநிற்கும்; அங்ஙனம் நிற்குமாறு, இன்பத்தில் பவானியும், ஆடவரிடத்துத் திருமாலும், வெகுளியில் காளியும், போரில் துர்க்கையும், என்பது சிவாகமங்களின் துணிபு'. "ஏகைவ சக்தி: பரமேஸ்வரஷ்ய பின்ன சதுர்த்தா விநியோக காலே போகே பவானி புருஷேசு விஷ்ணு: கோபேது காளீ சமரே து துர்க்கா." 'திருத்தளி' என்பது இத்தலத்துத் திருக்கோயிலின் பெயர்.

2. பொ-ரை: கச்சணிந்த முலையினையுடைய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டவனும் பெரிய வேதங்கள் ஆனவனும், நிலமும் விண்ணும், வெம்மைமிகு தழலும் காற்றும் நீரும் உயர்மலையும் ஆயவனும், கொடிய நஞ்சையுண்டுகறுத்த கண்டத்தவனும், எண்டோளினனும், கயிலைமலையாகிய பொருப்பைத் தன் வாழிடமாகக் கொண்டவனும் ஆகித்தேரோடும் நெடுவீதிகளையுடைய திருப்புத்தூர்த் திருத்தளியில் என்றும் விருப்போடு விளங்கும் சிவ பெருமான் என்சிந்தையிலே என்றும் நீங்காமல் நிலைப்பவன் ஆவான்.