பக்கம் எண் :

1102
 
காராருங் கண்டன்காண் எண்டோ ளன்காண்

கயிலைமலைப் பொருப்பன்காண் விருப்போ டென்றுந்

தேராரும் நெடுவீதித் திருப்புத் தூரில்

திருத்தளியான் காண்அவனென் சிந்தை யானே.

2

2842.மின்காட்டுங் கொடிமருங்குல் உமையாட் கென்றும்

விருப்பவன்காண் பொருப்புவலிச்சிலைக்கை யோன்காண்

நன்பாட்டுப் புலவனாய்ச் சங்க மேறி

நற்கனகக் கிழிதருமிக் கருளி னோன்காண்

பொன்காட்டக் கடிக்கொன்றை மருங்கே நின்ற

புனக்காந்தள் கைகாட்டக் கண்டு வண்டு

தென்காட்டுஞ் செழும்புறவின் திருப்புத் தூரில்

திருத்தளியான் காண்அவனென் சிந்தை யானே.

3


கு-ரை: கூர் ஆர் - மறைந்து நின்றுதோன்றி வளர்தல் பொருந்திய. மண் முதலியவற்றை அஃறிணையாக எண்ணிச் செல்லுதற்கு இடையே, 'அழலவன்' என உயர்திணையாக எண்ணினார். 'அனைத்தையும் சடப்பொருள்களாய் எண்ணினும், அவற்றிற்குத் தலைமை பூண்ட கடவுளராய் எண்ணினும், இறை நிறைவு பொருந்தும்' என்றற்கு, தலைமைக் கடவுளரை, 'அதி தெய்வங்கள்' என்பர். கார் ஆரும் - கருமை நிறைந்த; 'மேகம் போலப்பொருந்திய' என்றுமாம். "விருப்போடு' என்றது, "திருத்தளியான்" என்ற வினைக் குறிப்போடு முடிந்தது.

3. பொ-ரை: மின்னலும் கொடியும் போன்ற இடையினையுடைய உமையம்மையால் என்றும் விரும்பப்படும் கேள்வனும், மலையாகிய வலிமைமிக்க வில்லை வளைத்த கையினனும், நல்ல பாட்டுக்களையாக்க வல்ல புலவனாய்ச் சங்கம் போந்து நல்லபொற் கிழியைத் தருமிக்கு அருளியவனும் ஆகி, மணமிக்ககொன்றை மலர் பொன்னின் வனப்பைக் காட்ட, அருகேநின்ற மேட்டு நிலக் காந்தள் கைகளின் வடிவினைக்காட்ட, இவற்றைக் கண்டு வண்டு இசைபாடும் முல்லையும் குறிஞ்சியும் மயங்கிய வளமிக்க திருப்புத்தூர்த் திருத்தளியில் விளங்கும் சிவபெருமான் என் சிந்தையில் என்றும் நீங்காமல் நிலைப்பவன் ஆவான்.