| 2843. | ஏடேறு மலர்க்கமலத் தயனும் மாலும் | | | இந்திரனும் பணிந்தேத்த இருக்கின் றான்காண் | | | தோடேறு மலர்க்கடுக்கை வன்னி மத்தந் | | | துன்னியசெஞ் சடையான்காண் துகள்தீர் சங்கம் | | | மாடேறி முத்தீனுங் கானல் வேலி | | | மறைக்காட்டு மாமணிகாண் வளங்கொள் மேதி | | | சேடேறி மடுப்படியுந் திருப்புத் தூரில் | | | திருத்தளியான்காண் அவனென் சிந்தை யானே. | 4 |
| 2844. | கருமருவு வல்வினைநோய் காற்றி னான்காண் | | | காமருபூங் கச்சியே கம்பத் தான்காண் | | | பெருமருவு பேருலகில் பிணிகள் தீர்க்கும் | | | பெரும்பற்றத் தண்புலியூர் மன்றா டிகாண் | |
4. பொ-ரை: இதழ்கள் நிறைந்த தாமரைமலரில் விளங்கும் நான்முகனும், திருமாலும் இந்திரனும், பணிந்து துதிக்கும் வண்ணம் இருப்பவனும், இதழ்களையுடையகொன்றை, வன்னி, ஊமத்தை ஆகிய மலர்கள் செறிந்த செஞ்சடையினனும், குற்றமற்ற சங்கம் பக்கத்தே ஏறிமுத்தை ஈனும் கடற்கரையை எல்லையாக உடைய மறைக்காட்டில்வாழ் மணியும் ஆகி, வளவிய பயிர்களை மேயும் எருமைகரை மீது ஏறி நீர் நிலையில் படியும் திருப்புத்தூர்த்திருத்தளியில் திகழும் சிவபெருமான் என்றும் என்சிந்தையில் நின்று நிலவுபவன் ஆவான். கு-ரை: ஏடு ஏறு, தோடு ஏறு - இதழ்கள்பொருந்திய. 'ஏடு தோடு' என வந்தது, பொருட்பின்வருநிலை, கடுக்கை - கொன்றை, துகள்தீர் - குற்றம்அற்ற; நல்ல. சங்கம் - சங்கு. மாடு - கரை. கானல் -கடற்கரை. மேதி - எருமை. சேடு - மேடு; என்றது, கரையை,ஏறி - கடந்து சென்று. படியும் - மூழ்குகின்ற, "மேதிசேடு ஏறி மடுப் படியும்" என்றது. 'மருத நிலஞ் சூழ்ந்த'என்றபடி. 5. பொ-ரை: பிறப்பைப் பொருந்துவதற்கு ஏதுவாகிய வலிய வினை நோயை நீக்கியவனும்,விருப்பம் வருதற்குரிய பொலிவுடன் விளங்கும் கச்சிஏகம்பனும், நிலையாமைப் பெருமை மேவும் பெரிய நிலவுலகில் பொருந்தும் பிணிகளைத் தீர்க்கும் குளிர்ச்சிமிக்க பெரும் பற்றப் புலியூர் மன்றாடியும், கற்பகத்தருப் போலக் கொடுக்கும் பெருமை மிக்க கையினையுடைய
|