| தருமருவு கொடைத்தடக்கை யளகைக் கோன்றன் | | | சங்காதி ஆரூரில் தனியா னைகாண் | | | திருமருவு பொழில்புடை சூழ்திருப்புத் தூரில் | | | திருத்தளியான் காண்அவனென் சிந்தை யானே. | 5 |
| 2845. | காம்பாடு தோளுமையாள் காண நட்டங் | | | கலந்தாடல் புரிந்தவன்காண் கையில் வெய்ய | | | பாம்பாடப் படுதலையிற் பலிகொள் வோன்காண் | | | பவளத்தின் பருவரைபோல் படிவத் தான்காண் | | | தாம்பாடு சினவிடையே பகடாக் கொண்ட | | | சங்கரன் காண் பொங்கரவக் கச்சை யோன்காண் | | | சேம்பாடு வயல்புடைசூழ் திருப்புத் தூரில் | | | திருத்தளியான் காண்அவனென் சிந்தை யானே. | 6 |
அளகைக் கோன் ஆகிய குபேரனுக்கு மிக்க நண்பனும், ஆரூரில் அமர்ந்த ஒப்பற்ற யானையும் ஆகித் திருப்புத்தூர்த்திருத்தளியில் திகழும் சிவபெருமான் என்றும் என்சிந்தையில் நின்று நிலவுபவன் ஆவான். கு-ரை: கரு மருவு - பிறப்பில் பொருந்துதற்கு ஏதுவாகிய காற்றினான் - உமிழ்வித்தான்; நீக்கினான். "அகற்றினான்" என்பதும் பாடம். 'பெருமை' என்னும் பண்புப் பெயரின் ஈறு தொகுத்தலாயிற்று. "பெருமை மருவு" என்றது, "நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை யென்னும் - பெருமை யுடைத்திவ் வுலகு' (குறள்.336) என்றதனை உட்கொண்டு அருளிய இகழ்ச்சிக் குறிப்பு. 'பிணிகள் தீர்க்கும் மன்றாடி' என இயையும். பெரும்பற்றப்புலியூர் - தில்லை. மன்று - சபை. தருமருவு - கற்பகத் தருவைப்போலும். அளகைக் கோன். குபேரன். சங்காதி - மிக்க நண்பன்; (சங்காதம் - மிக்க நட்பு.) 'சங்காதி' என்பதன்றிப் பிறவாறு ஓதுவன பாடம் அல்ல, ஆரூரில் - திருவாரூரில்; உள்ள ஒப்பற்ற யானை போன்றவன், 'யானை' என்றது, காதற் சொல். திரு - அழகு. 6. பொ-ரை: மூங்கில் போன்ற தோளுடைய உமையம்மை காணுமாறு பல கூத்து விகற்பங்களையும் கலந்து ஆடியவனும், சீற்றம்மிக்க பாம்பு கையிற் கங்கணமாய்ப் பொருந்தி ஆடத் தலை ஓட்டில் பிச்சை ஏற்பவனும்,
|