| 2846. | வெறிவிரவு மலர்க் கொன்றை விளங்கு திங்கள் | | | வன்னியொடு விரிசடைமேல் மிலைச்சி னான்காண் | | | பொறிவிரவு கதநாகம் அக்கி னோடு | | | பூண்டவன்காண் பொருபுலித்தோ லாடை யான்காண் | | | அறிவரிய நுண்பொருள்க ளாயி னான்காண் | | | ஆயிரம்பே ருடையவன்காண் அந்தண் கானல் | | | செறிபொழில்சூழ் மணிமாடத் திருப்புத் தூரில் | | | திருத்தளியான் காண்அவனென் சிந்தை யானே. | 7 |
பவளத்தால் ஆன பெரிய மலை போன்ற வடிவினனும், கயிற்றால்பிணித்தற்குரிய சினமிக்க இடபத்தையே யானை எனமதிக்கத்தக்க ஊர்தியாகக் கொண்ட சங்கரனும், பொங்கும் சினப் பாம்பையே அரைப்பட்டிகையாகப்புனைந்தவனும் ஆகி நீர்ச் சேம்புகள் நிறைந்த வயல்கள்நாற்புறமும் சூழ்ந்த திருப்புத்தூர்த் திருத்தளியில் திகழும் சிவபெருமான் என்றும் என் சிந்தையில் நின்றுநிலவுபவன் ஆவான். கு-ரை: 'காம்பு - மூங்கில். ஆடுஉவம உருபு. படிவத்தான் - வடிவத்தை உடையவன்; படிமத்தான்' என்பது பாடம் அன்று, தாம்பு ஆடு - கயிற்றிற்பொருந்தும்; என்றது 'பசுவாந் தன்மை உடைய' என்றபடி. "தாம்பாடு, சினம்' என்றவை இன அடைகள். பகடு -யானை; சிறந்த ஊர்தி யானையே யாகலின், அதனையே அருளினார். பொங்கு - சினம் மிக்க; இதுவும் இன அடை. சேம்பு ஆடு - நீர்ச் சேம்புகள் பொருந்திய. 7. பொ-ரை: மணம்நாறும் கொன்றை மலரையும் விளக்கமுடைய திங்களையும் வன்னியையும் விரிந்த சடைமேல் சூடியவனும், புள்ளிகள் பொருந்திய கோபிக்கும் நாகத்தையும், எலும்பினையும் அணியாகப் பூண்டவனும், போர்க்குணமுடைய புலியினது தோலை ஆடையாகக் கொண்டவனும், அறிதற்கரிய நுண்பொருள்களாய் ஆனவனும், ஆயிரம் பேர் உடையவனும் ஆகி, அழகியதும், குளிர்ந்ததும் ஆகிய கடற்கரையிடத்தே நெருங்கிவிளங்கும் பொழில்கள் சூழ்ந்ததும், வரிசையாயமைந்த மாடங்களை உடையதுமாகிய திருப்புத்தூர்த் திருத்தளியில் திகழும் சிவபெருமான் என்றும் என் சிந்தையில் நின்று நிலவுபவன் ஆவான். கு-ரை: வெறி - வாசனை. மிலைச்சினான்- சூடினான். பொறி - புள்ளி. கதம் - சினம். அக்கு -எலும்பு, 'கானல் செறிபொழிலைச் சூழும்' என்றதனை, நெய்தல்மருதத்தொடு மயங்கியதாக உரைக்க.
|