| 2847. | புக்கடைந்த வேதியற்காக் காலற் காய்ந்த | | | புண்ணியன்காண் வெண்ணகைவெள் வளையாளஞ்ச | | | மிக்கெதிர்ந்த கரிவெருவ உரித்த கோன்காண் | | | வெண்மதியைத் தலைசேர்த்த தண்மை யோன்காண் | | | அக்கரும்பு பெரும்புன்னை நெருங்கு சோலை | | | ஆரூருக் கதிபதிகாண் அந்தண் தென்றல் | | | திக்கணைந்து வருமருங்கின் திருப்புத் தூரில் | | | திருத்தளியான் காண்அவனென் சிந்தை யானே. | 8 |
| 2848. | பற்றவன்காண் ஏனோர்க்கும் வானோ ருக்கும் | | | பராபரன்காண் தக்கன்றன் வேள்வி செற்ற | | | கொற்றவன்காண் கொடுஞ்சினத்தை யடங்கச் செற்று | | | ஞானத்தை மேன்மிகுத்தல் கோளாக் கொண்ட | |
8. பொ-ரை: தன்பால் அடைக்கலம்புக்க வேதியன் மார்க்கண்டேயனுக்காக இயமனைக் கோபித்துக் கொன்ற புண்ணியனும், வெள்ளிய பற்களையும் வெள்ளிய வளையல்களையும் உடைய உமையம்மை அஞ்சுமாறுசினம் மிக்கு எதிர்த்த யானை நடுங்க அதன் தோலை உரித்தவனும், வெள்ளிய மதிப்பிறையைத் தலையில்தரித்து அருளியவனும், மன்மதன் வில்லாகக் கொள்ளுதற்கு வாய்ப்புடைய அக்கரும்பும், பெருமைமிக்க புன்னையும் நெருங்கிய சோலைமிக்க ஆரூர்க்கு அதிபதியும் ஆகி,மெல்லிதாய்க் குளிர்ந்த தென்றல் வடக்குத் திக்கினை அணையவரும் இடத்தில் உள்ள திருப்புத்தூர்த் திருத்தளியில் திகழும் சிவபெருமான் என்றும் என் சிந்தையில் நின்றுநிலவுபவன் ஆவான். கு-ரை: வேதியன் - மார்க்கண்டேயர். வெள்வளை - சங்கவளை. தண்மை - அருள். 'அக் கரும்பு' என்பதில் அகரம் பண்டறி சுட்டாய், பெருமை குறித்து நின்றது. 'கரும்பும் புன்னையும் நெருங்கு சோலை' என்றதனால், நெய்தலும் மருதமும் மயங்கியதாக உரைக்க. அதிபதி - தலைவன். மருங்கு - இடம். 9. பொ-ரை: அண்டினார்க்குத்துணையானவனும், தேவர்க்கும் மற்றையவர்க்கும் அவரின் வேறுபட்டு மேலானவனும், அவரோடு
|