| பெற்றியன்காண் பிறங்கருவிக் கழுக்குன் றத்தெம் | | | பிஞ்ஞகன்காண் பேரெழிலார் காம வேளைச் | | | செற்றவன்காண் சீர்மருவு திருப்புத் தூரில் | | | திருத்தளியான் காண்அவனென் சிந்தை யானே. | 9 |
கலந்து நின்று அவரைப் போலக் கீழானவனும், தக்கனது வேள்வியை அழித்த வெற்றியினனும், கொடிய சினத்தை முற்றிலும் அழித்தவனும், ஞானத்தை மேன்மேலும்வளரச் செய்தலைத் தன்கொள்கையாகக் கொண்டவனும், அருவி விளங்கும் கழுக்குன்றில் யாம் வணங்கும் தலைக்கோலம் உடையவனும், மிக்க எழில் படைத்த மன்மதனை விழித்து அழித்தவனும், ஆகி, புகழ்மிக்க திருப்புத்தூர்த்திருத்தளியில் திகழும் சிவபெருமான் என்றும் என் சிந்தையில் நின்று நிலவுபவன் ஆவான். கு-ரை: பற்றவன் - துணையாய் இருப்பவன். 'வானோருக்கும் ஏனோர்க்கும் பற்றவன்' என்க. பராபரன் 'மேலான பொருளாயும், கீழானபொருளாயும் இருப்பவன்; 'மேல்' என்றது தன்னையும், 'கீழ்' என்றது பிறவற்றையும், பொருட்டன்மையால் தானே ஆகியும், கலப்பினால் பிற பொருள்களாகியும் இருப்பவன் என்றதாம். கொற்றவன் - வெற்றியை உடையவன். "சினம்" என்றது, வெறுப்பினை; அதனானே, அதன் மறுதலையாகிய விருப்புங் கொள்ளப்படும்; படவே, 'உயிர்களது விருப்பு வெறுப்புக்களுக்கு முதலாகிய அறியாமையை நீக்கி அறிவை மேன்மேல் மிகுவித்தலையே குறிக்கோளாகக்கொண்ட தன்மையை (பெருங்கருணையை) உடையவன்' என்று அருளியவாறாம். இவ்வாறு இறைவன் உயிர்களிடத்து அவற்றிற்கு உயிராய் உள் நின்று செய்துவருதலை, "மன்னும் இருளை மதிதுரந்த வாறன்பின் மன்னும் அரனே மலந்துரந்து" எனச் சிவஞான போதமும், (சூ. 11. அதி. 2) "அந்த அருள்உனக்கிங் காதாரமாய்அல்லின் இந்து வெனஎறித்திட் டேகமாய் - முந்தி உனை உனக்குத் தான்விளக்கி ஓவா துணர்த்தும் தனைஉனக்குக் காட்டுமே தான்" எனத் துகளறுபோதமும் (36) விளக்கின. அவ்விடத்து, 'மதி' எனவும்,
|