பக்கம் எண் :

1117
 
2855.அடியார் சிலம்பொலிக ளார்ப்பக் கண்டேன்

அவ்வவர்க்கே யீந்த கருணை கண்டேன்

முடியார் சடைமேல் அரவ மூழ்க

மூரிப் பிறைபோய் மறையக் கண்டேன்

கொடியா ரதன்மேல் இடபங் கண்டேன்

கோவணமுங் கீளுங் குலாவக் கண்டேன்

வடியாரும் மூவிலைவேல் கையிற் கண்டேன்

வாய்மூ ரடிகளைநான் கண்ட வாறே.

6

2856.குழையார் திருத்தோடு காதிற் கண்டேன்

கொக்கரையுஞ் சச்சரியுங் கொள்கை கண்டேன்

இழையார் புரிநூல் வலத்தே கண்டேன்

ஏழிசையாழ் வீணை முரலக் கண்டேன்


6. பொ-ரை: திருவடிகளிற் கட்டிய சிலம்பு ஒலிகளின் ஆரவாரத்தை உடையவராய், அவரவர்க்கு ஏற்குமாறு ஈந்த கருணையினராய், சடைச்சுற்றின் நெருக்கினிடை பாம்பு புகுந்துமறைய, அப்பாம்பு தன்னைப் பற்றக் கரந்து வருவதாகக் கருதிப் பெருமை மிக்கபிறையும் அச்சடையின் வேறோர் இடுக்கில் புக்குமறையக் கண்டவராய், கொடியிடத்துப் பொருந்திய இடபத்தினை உடையவராய், கோவணமும் கீளும்கொண்டு விளங்குபவராய், கூரிய மூவிலை வேலினைக் கையில் ஏந்தியவராய்வாய்மூர்ச் சிவபெருமானை நான் கண்டேன்.

கு-ரை: அடி ஆர் சிலம்பு ஒலிகள் - அடியின்கண் பொருந்திய சிலம்பினது ஒலிகள்; பன்முறையாக ஒலித்தலின், "ஒலிகள்" எனப் பன்மை கூறப்பட்டது. "அவ்வவர்க்கு ஈந்த" என்றது, 'அவரவர்கட்கு ஏற்குமாற்றான் ஈந்த' என்றபடி. முடி ஆர்சடை - மகுடமாகப் பொருந்திய சடை. 'அரவம் ஊர' என்பதேபாடமாதல் வேண்டும். மூரி - பெருமை. 'ஆர் கொடியதன் மேல்' என மாற்றி யுரைக்க; அது, பகுதிப் பொருள் விகுதி; 'கொடியாக ஆர்ந்த அதன்மேல்' எனச் சுட்டுப்பெயராக் கொண்டு உரைத்தலுமாம். குலாவுதல் - விளங்குதல். வடி - கூர்மை.

7. பொ-ரை: குழையும் நிறைந்த அழகினையுடைய தோடும் விளங்கும் காதுகளை உடையவராய், கொக்கரை சச்சரி ஆகிய வாச்சியங்களைப் பயன் கொள்பவராய், இழைகள் பொருந்திய முறுக்கப்பட்ட பூணூலை வலம்வர