| தழையார் சடைகண்டேன் தன்மை கண்டேன் | | | தக்கையொடு தாளங் கறங்கக் கண்டேன் | | | மழையார் திருமிடறும் மற்றுங் கண்டேன் | | | வாய்மூ ரடிகளைநான் கண்ட வாறே. | 7 |
| 2857. | பொருந்தாத செய்கை பொலியக் கண்டேன் | | | போற்றிசைத்து விண்ணோர் புகழக் கண்டேன் | | | பரிந்தார்க் கருளும் பரிசுங் கண்டேன் | | | பாராய்ப் புனலாகி நிற்கை கண்டேன் | |
அணிந்தவராய், ஏழிசையும் பயிலும் யாழ் வீணைகளின் இசையை நுகர்வாராய்,தழைத்த சடையினராய், தம்வயத்தினராய், தக்கை தாள முழக்கினராய் மேகம்போன்று கறுத்த திருமிடற்றினராய் வாய்மூர்ச் சிவபெருமானை நான் கண்டேன். கு-ரை: 'குழை தோடு இரண்டும் கண்டேன்' எனச் செவ்வெண்ணாக்கி யுரைக்க. ஆர்திருத்தோடு - நிறைந்த அழகினையுடைய தோடு; இனி, 'குழையொடு ஆர்ந்ததிருத்தோடு' எனினுமாம். குழை ஆடவர் அணிவதாகலின் அது தன் கூறாகியவலக்காதினும், தோடு பெண்டிர் அணிவதாகலின் அஃது அம்மை தன் கூறாகிய இடக்காதினும் உள்ளன என்க; "தோலும் குழையும் துகிலும் சுருள்தோடும்" (தி.8திருவாசகம். கோத்தும்பி. 18) என்று அருளியதுங் காண்க. கொக் கரை, சச்சரி,தக்கை, தாளம் இவை வாச்சிய வகைகள். இழை ஆர் புரி நூல் - இழைகள் பொருந்தியபுரியினையுடைய பூணூல்; பூணூலை வலம்வர அணிதல் மங்கலம் உள்ள காலத்தாகலின், என்றும் நீங்காத மங்கலத்தை உடையவனாகிய சிவபிரானது பூணூல் வலமாகியேதோன்றுவதாயிற்று. தழை ஆர் சடை - தழைத்தல் பொருந்திய சடை. இனி, தழைதளிரைக் குறித்தது எனக் கொண்டு. 'தளிர்போலப் பொருந்திய சடை' என்றுரைத்தலுமாம். தன்மை - பிறிதொன்றன் வழிப்படாது தானேயாய் நிற்கும் இயல்பு; இது 'தன்வயம் அல்லது சுதந்திரதை' எனப்படும். கறங்க - ஒலிக்க. மழைஆர் - மேகம்போலப் பொருந்திய. 8. பொ-ரை: உலகத்தார்க்கு ஏலாத செய்கைகள் ஆம் நஞ் கண்ணுதல், பாம்பணிதல் போன்றனவும், பொருத்தமற்ற செய்கைகள் ஆம் சடைதரித்துப்
|