| 2861. | மலைமகளைப் பாக மமர்ந்தார் தாமே | | | வானோர் வணங்கப் படுவார் தாமே | | | சலமகளைச் செஞ்சடைமேல் வைத்தார் தாமே | | | சரணென் றிருப்பார்கட் கன்பர் தாமே | | | பலபலவும் வேடங்க ளானார் தாமே | | | பழனை பதியா வுடையார் தாமே | | | சிலைமலையா மூவெயிலும் அட்டார் தாமே | | | திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே. | 2 |
என்றுரைத்தலே சிறப்பென்க. "இருள் உளதாய், பகலும் இரவும் இலவாய், சத்தும் அசத்தும் இலவாய் இருந்தபோது தனியே சிவபிரான் ஒருவனே இருந்தான் -(சுவேதாசுவதரம்) "அவன், நான் பலவாகுவேனாக என விரும்பினான்" எதுஎது (முன்பு) இருந்ததோ அதை அதை எல்லாம் அவன் படைத்தான் - அதனைப் படைத்த பின்பு அதனுள் நுழைந்து, சத்தும் தியத்தும் ஆயினன் - (தைத்ரீயம்) என இவ்வாறு வரும் உபநிடதப் பகுதிகள் பலவும் ஈண்டுக் காணத்தக்கன. 'தொறு' என்பதன் திரிபாகிய, "தோறு" என்பதனை, பின்னுள்ள "ஊழி" என்புழியும் விரிக்க. ஊழி தோறும் உயர்தல், பல உயிர்களை வீடு பெறுவித்து என்க. நின்று - ஒரு நிலையே நின்று. 'எங்கும் ஆகி நிமிர்ந்தார்' என்க. நிமிர்தல், இங்குப் பரத்தல் மேலது. கொன்று ஆடும் - உயிர்களைக் கொன்றுதிரிகின்ற. கோலம் - அழகு. பழனை, 'பழையனூர்' என்பதன் மரூஉ. 'பழையனூர் என்பதுஊர்' எனவும், 'ஆலங்காடு என்பது அதனை அடுத்த காடு' எனவும் கருதப்படுதலின், ஆலங்காட்டுப் பெருமானை அவ்வூரை உடையவனாகவும் அருளிச்செய்தார். சென்று ஆடும் - தேடிச் சென்று மூழ்குகின்ற. 'மூர்த்தி, தலம், தீர்த்தம்' என்னும் மூன்று வடிவிலும் இறைவன் இருந்து, வழிபடுதல், தங்குதல், மூழ்குதல்' என்னும் இச்செயல்களின் வழி உயிர்கட்கு அருள்புரிதல் நோக்கி, "சென்றாடு தீர்த்தங்கள் ஆனார் தாமே" என்று அருளிச் செய்தார். திருவருளே உண்மைச் செல்வம் ஆதலின், அதனை உடைய சிவபிரானே, 'செல்வன்' என்றும், 'திருவாளன்' என்றும் சொல்லப்படுவான். "செல்வன் கழல்ஏத்தும் செல்வம் செல்வமே" (தி.1. ப.80. பா.5.) அதர்வசிகை உபநிடதமும், சர்வைஸ்வரிய சம்பந்தர், "சர்வேஸ்வரர், சம்பு" எனக் கூறிற்று. 2. பொ-ரை: மலைமகளைத் தம் உடலிற்பாகமாக விரும்பிக் கொண்டவரும், வானோரால் வணங்கப்படுபவரும், கங்கையாளைத் தம் செஞ்சடைமேல் வைத்தவரும், சரண்புக்குத் தம் செயல் அற்று இருப்பார்க்கு
|