பக்கம் எண் :

1125
 
2863.நாறுபூங் கொன்றை முடியார் தாமே

நான்மறையோ டாறங்கஞ் சொன்னார் தாமே

மாறிலா மேனி யுடையார் தாமே

மாமதியஞ் செஞ்சடைமேல் வைத்தார் தாமே

பாறினார் வெண்டலையி லுண்டார் தாமே

பழனை பதியா வுடையார் தாமே

தேறினார் சித்தத் திருந்தார் தாமே

திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.

4

2864.அல்லும் பகலுமாய் நின்றார் தாமே

அல்லும் பகலுமாய் நின்றார் தாமே

சொல்லும் பொருளெலா மானார் தாமே

தோத்திரமுஞ் சாத்திரமு மானார் தாமே


4. பொ-ரை: மணங்கமழும் கொன்றை மலரைச் சூடிய முடியினரும், மறை நான்கும் அங்கம் ஆறும் சொன்னவரும், நரைத்துத் திரைத்து மூத்து விளிதல் இல்லாத மேனியை உடையவரும், அழகிய பிறையைத் தஞ்சடைமேல் வைத்தவரும், அழிந்தாருடைய வெள்ளிய தலையோட்டில் பிச்சை ஏற்று உண்டவரும், பழையனூரைத் தமக்குரியதாக உடையவரும், தம் இயல்புகளைத் தெளிவாக உணர்ந்த மெஞ்ஞானியரின் சித்தத்தில் இருந்தவரும் திருவாலங்காட்டுறையும் செல்வரே ஆவார்.

கு-ரை: மாறு இலா மேனி - அழிதல் இல்லாத உடம்பு; எனவே, 'தோற்றம் இல்லாதது' என்பதும் முடிந்தது; 'மாயையின் கலக்கமாய்த் தோன்றி நின்றழியும் உடம்பின்றித் தம் இச்சையாற் கொள்ளும் அருளுடம்பு உடையவர்' என்றதாம். மா - பெருமை. பெருமையாவன, மாசின்மையும், என்றும் ஒருபடித்தாய் நிற்றலும் முதலியன என்க. பாறினார் - அழிந்தவர். தேறினார் - தமது உண்மையையும் பெருமையையும் ஐயுறாது தெளிந்து நின்றவர்.

5. பொ-ரை: இரவும் பகலுமாய் நின்றவரும், அந்தியும் சந்தியும் ஆனவரும், சொல்லும், பொருளும் ஆகிய எல்லாப் பொருள்களும் ஆனவரும்,