| பல்லுரைக்கும் பாவெலா மானார் தாமே | | | பழனை பதியா வுடையார் தாமே | | | செல்லும் நெறிகாட்ட வல்லார் தாமே | | | திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே. | 5 |
தோத்திரமும் சாத்திரமும் ஆனவரும், மற்றை உலகியலுரைக்கும் எல்லாப்பாக்களும் ஆனவரும், பழையனூரைத் தமக்குரியதாக உடையவரும், செல்லுதற்குரியவழியைக் காட்ட வல்லவரும் திருவாலங்காட்டுறையும் செல்வரே ஆவார். கு-ரை: அல் - இரவு. அந்தி - மாலை. சந்தி - 'காலை, நண்பகல்' என்னும் ஏனைய இருபொழுதுகள்; இம் முப்பொழுதுகளும் இறைவனை நினைந்து வழிபடுதற்கு உரிய பொழுதுகளாகலின், அவ்வாறு வழிபடுவார்க்கு, அப் பொழுதுகளின் தலைமைத் தெய்வங்களாய் நின்று அவரவர் விரும்பும் உலகின் பத்தையும் வீட்டின்பத்தையும் (புத்தி முத்திகளைத்) தருபவன் சிவபெருமான் ஒருவனேயாகலின், "அந்தியும் சந்தியும் ஆனார் தாமே" என்று அருளிச்செய்தார். "பொருள்" என்புழித் தொகுக்கப்பட்ட எண்ணும் மையைவிரிக்க. உலகனைத்தும் சொல்லும் பொருளும் என்னும் இருகூற்றின் உள்ளே அடங்கலின், 'சொல்லும் பொருளும் ஆகிய எல்லாப் பொருள்களும்' என்று அருளினார். இனி, "பொருள்" என்றது, பொருளுணர்வை எனக் கொள்ளுதலுமாம். தோத்திரம், இறைவனது புகழ்ப் பாடல்கள். சாத்திரம், இறைவனது இயல்பையும், அவனுக்கு அடிமையும் உடைமையும் ஆகிய உயிர் உலகங்களது இயல்பையும், ஐயமும் மருட்கையும் இன்றித் தெளிவிப்பன, அதனால், அவை இரண்டும் இறைவனையே பொருளாக உடைமையின், "தோத்திரமும் சாத்திரமும் ஆனார்" என்று அருளிச் செய்தார். அவையிரண்டனாலும் அஞ்ஞானந்தேய, ஞானம்மிகும் என்க. திருவள்ளுவ நாயனாரும், "இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு" (குறள் - 5) என்பதனால் தோத்திரத்தினது இன்றியமையாமையையும், "ஓர்த்துள்ளம் உள்ள துணரின் ஒருதலையாப் பேர்த்துள்ள வேண்டா பிறப்பு"
(குறள் - 357)
|