| 2865. | தொண்டாய்ப் பணிவார்க் கணியார் தாமே | | | தூநீ றணியுஞ் சுவண்டர் தாமே | | | தண்டா மரையானும் மாலுந் தேடத் | | | தழலுருவா யோங்கி நிமிர்ந்தார் தாமே | | | பண்டான இசைபாட நின்றார் தாமே | | | பழனை பதியா வுடையார் தாமே | | | திண்டோள்க ளெட்டு முடையார் தாமே | | | திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே. | 6 |
என்பதனால் சாத்திரத்தினது இன்றியமையாமையையும் உணர்த்தியருளினார். "பல் உரைக்கும்" என்புழி, 'உரை' என்றது பொருளை. "உரைக்கும்" என்பதன்பின், 'உரிய' என ஒருசொல் வருவிக்க. பா - பாட்டு. வீடுபற்றிய மெய்ந்நெறிச் செய்யுளும் நூலும் ஆகிய தோத்திர சாத்திரங்களேயன்றி' அறம், பொருள், இன்பம்' என்பவை பற்றிய உலகியற் செய்யுளும் நூல்களுமாகிய அவைகளாய் நிற்பவரும் அவர்தாமே என்பார், 'பல் உரைக்கும் பாவெலாம் ஆனார் தாமே' என்று அருளிச்செய்தார். சிறப்புப் பற்றிப் பாட்டினை எடுத்தோதி அருளினாராயினும், 'உரை எலாம் ஆனார்' என்பதும் கொள்ளப்படும். இவற்றுள், தோத்திர சாத்திரங்களாய் நிற்றல் இடையீடின்றி நேரே எனவும், பல்லுரைக்கும் உரிய பாவெலாம் ஆகி நிற்றல் 'அறம், பொருள், இன்பம்' என்னும் உறுதிப் பொருள்கள் வாயிலாக எனவும் கொள்க. ஆல் நிழல் இருந்து அறம் முதலிய நான்கினையும் நால்வர் முனிவர்கட்கு முதற்கண் உணர்த்தி, உலகியலும் மெய்ந்நெறியும் ஆகிய இரண்டனையும் தெரிவித்தருளிய முதல் ஆசிரியன் சிவபிரானே யாகலின், 'செல்லும் நெறிகாட்ட வல்லார் தாமே' என அருளிச்செய்தார்; "அருந்தவருக் கறமுதல்நான் கன்றருளிச் செய்திலனேல் திருந்தவருக் குலகியற்கை தெரியாகாண் சாழலோ" என்று அருளிச்செய்ததுங் காண்க. (தி.8 திருவா. திருச்சாழல். 20) 6. பொ-ரை: தொண்டராய்ப் பணிவார்க்கு அருகில் உள்ளவரும், தூய வெண்ணீற்றையணிந்து நல்லநிறமுடையவரும், குளிர்ந்த தாமரை மலரில் உறையும் நான்முகனும் திருமாலும் தேடத் தழற் பிழம்பாய் நிமிர்ந்து ஓங்கியவரும், பழைமையான இசையில் பாட அது கேட்டு மகிழ்ந்து நின்றவரும், பழையனூரைத் தமக்கு உரியதாக
|