| 2867. | விண்முழுதும் மண்முழுது மானார் தாமே | | | மிக்கோர்க ளேத்துங் குணத்தார் தாமே | | | கண்விழியாக் காமனையுங் காய்ந்தார் தாமே | | | காலங்க ளூழி கடந்தார் தாமே | | | பண்ணியலும் பாட லுகப்பார் தாமே | | | பழனை பதியா வுடையார் தாமே | | | திண்மழுவாள் ஏந்து கரத்தார் தாமே | | | திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே. | 8 |
| 2868. | காரார் கடல்நஞ்சை யுண்டார் தாமே | | | கயிலை மலையை உடையார் தாமே | | | ஊராஏ கம்ப முகந்தார் தாமே | | | ஒற்றியூர் பற்றி யிருந்தார் தாமே | | | பாரார் புகழப் படுவார் தாமே | | | பழனை பதியா வுடையார் தாமே | | | தீராத வல்வினைநோய் தீர்ப்பார் தாமே | | | திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே. | 9 |
8. பொ-ரை: விண்முழுதுமாய் மண்முழுதுமாய் வியாபித்து நின்றவரும், உயர்ந்தோர்கள்புகழும் குணத்தினரும், நெற்றிக் கண்ணை விழித்துக் காமனைக் காய்ந்தவரும், காலங்களாகிய ஊழிகள் பலவற்றைக் கடந்தவரும், பண்கள் உலவுதற்கு இடமாகிய பாடல்களை விரும்புபவரும், பழையனூரைத் தமக்குரியதாக உடையவரும், வலியமழுவாயுதத்தை ஏந்திய கரத்தவரும் திருவாலங்காட்டுறை செல்வரே ஆவார். கு-ரை: மிக்கோர்கள் - உயர்ந்தவர்கள்; அவர்கள் அவரது குணத்தை ஏத்துதல் அவைபிறரிடத்து இல்லாத பேரருட் குணங்களாதல் பற்றி. விழியால் - விழித்தற்செயலால். 'காலங்களாகிய ஊழிகள் பலவற்றைக் கடந்தார்' என்க. பண் இயலும்பாடல் - பண்கள் உலாவும் பாடல்கள். 9. பொ-ரை: கடலில் தோன்றிய கரிய நஞ்சை உண்டவரும், கயிலை மலையை உடையவரும், தமக்குரிய ஊராக ஏகம்பத்தை விரும்பிக் கொண்டவரும், தமக்குரித்தல்லாததாய் ஒற்றியாகப் பெற்ற ஊர் என்று
|