| 2872. | மெய்த்தவத்தை வேதத்தை வேத வித்தை | | | விளங்கிளமா மதிசூடும் விகிர்தன் தன்னை | | | எய்த்தவமே உழிதந்த ஏழை யேனை | | | யிடர்க்கடலில் வீழாமே யேற வாங்கிப் | | | பொய்த்தவத்தா ரறியாத நெறிநின் றானைப் | | | புனல்கரந்திட் டுமையொடொரு பாகம் நின்ற | | | தத்துவனைத் தலையாலங் காடன் தன்னைச் | | | சாராதே சாலநாள் போக்கி னேனே. | 3 |
| 2873. | சிவனாகித் திசைமுகனாய்த் திருமா லாகிச் | | | செழுஞ்சுடராய்த் தீயாகி நீரு மாகிப் | | | புவனாகிப் புவனங்க ளனைத்து மாகிப் | | | பொன்னாகி மணியாகி முத்து மாகிப் | |
3. பொ-ரை: உண்மைத் தவமாகி, வேதமுமாகி, வேதத்தின் முதலும் ஆகி, ஒளிரும் இளம்பிறையைச் சூடி, வேறுபட்ட இயல்பினனும், வீணே அலைந்து இளைத்த அறிவற்ற என்னைத் துன்பக் கடலில் வீழாமல் கரையேற எடுத்துப் பொய்த்தவத்தார் அறிய முடியாத நெறியில் என்னை நிற்பித்தவனும், கங்கையைச் சடையில் கரந்து உமையம்மையை ஒரு கூற்றிலே கொண்டு நின்றவனும் ஆகிய தலையாலங்காட்டண்ணலை அடையாமல் மிக்க நாளை வீண்நாள் ஆக்கினேன். கு-ரை: சிவபிரானது பணிகளே உண்மைத் தவமாதலின், அப்பணிகளைப் புரியுமாறு நிற்கும் அவனை, "மெய்த்தவம்" என்று அருளினார். வேத வித்து - வேதத்திற்குக்காரணன்; முதல்வன். "எய்த்து அவமே உழிதந்த" என்றாரேனும், 'அவமேஉழிதந்து எய்த்த' என்பதே திருவுள்ளமாகக்கொள்க. எய்த்தது, உடலைவருத்தியதன்றிப் பிறிது பயன் காணாதொழிந்தது. பொய்த்தவத்தார் -இறைவனுண்மை கொள்ளாது பிற சில செயல்களை மேற்கொள்பவர்; அவர் சமணரும்சாக்கியரும் என்க. 'நிற்பித்தானை' எனற்பாலது, "நின்றானை" எனப்பட்டது. "புனல்" என்பது, 'கங்கையாள்' என்னும் பொருளது. 4. பொ-ரை: சிவனாய், நான்முகனாய்த் திருமாலாய், சூரிய சந்திரராய், தீயாய், நீராய், புவலோகமாய், புவனங்கள் யாவுமாய், பொன்னாய், மணியாய், முத்துமாய், வேண்டுமிடங்களில் வேண்டியவாறே தோன்றுபவனாய், உயிர்கள்
|