| பவனாகிப் பவனங்க ளனைத்து மாகிப் | | | பசுவேறித் திரிவானோர் பவனாய் நின்ற | | | தவனாய தலையாலங் காடன் தன்னைச் | | | சாராதே சாலநாள் போக்கி னேனே. | 4 |
| 2874. | கங்கையெனுங் கடும்புனலைக் கரந்தான் தன்னைக் | | | காமருபூம் பொழிற்கச்சிக் கம்பன் தன்னை | | | அங்கையினில் மான்மறியொன் றேந்தி னானை | | | ஐயாறு மேயானை ஆரூ ரானைப் | | | பங்கமிலா அடியார்க்குப் பரிந்தான் தன்னைப் | | | பரிதிநிய மத்தானைப் பாசூ ரானைச் | | | சங்கரனைத் தலையாலங் காடன் தன்னைச் | | | சாராதே சாலநாள் போக்கி னேனே. | 5 |
வாழ்தற்கேற்ற இடங்கள் யாவுமாய், இடபத்தை ஊர்ந்து திரியும் ஒருகோலத்தை உடையனாய், தவ வேடந்தாங்கிநின்ற தலையாலங்காட்டண்ணலை அடையாமல் மிக்க நாளை வீணாள் ஆக்கினேன். கு-ரை: 'சிவனாகி' என்றது, 'உருத்திரனாகி' என்றபடி, "சுடர்" என்றது ஞாயிற்றையும் திங்களையும். புவன் - புவலோகமாய் உள்ளவன்; இது பூலோகத்தை அடுத்து நிற்றலின் வேறு ஓதியருளினார். "பொன்னாகி" முதலிய மூன்றனாலும், 'செல்வமாய் உள்ளவன்' என்றவாறு. பவன் - வேண்டும் இடங்களில் வேண்டியவாறே தோன்றுபவன். திரிவான் ஓர் பவன் - திரிபவனாகிய ஒருகோலத்தை யுடையவன். 'நின்ற தலையாலங்காடன்' என இயையும். தவன் -தவக்கோலம் உடையவன். 5. பொ-ரை: விரைந்து வரும் புனலையுடைய கங்கையைச் சடையில் கரந்தவனாய், விரும்பத்தக்க அழகிய பொழில் சூழ்ந்த கச்சி ஏகம்பனாய், அழகிய கையில்மான்கன்றொன்றை ஏந்தியவனாய், ஐயாறு மேயவனாய், ஆரூரனாய், குற்றமில்லா அடியார் மாட்டுப் பரிவுடையனாய், பரிதி நியமத்தவனாய், பாசூரினனாய், சங்கரனாய் நின்ற தலையாலங்காட்டண்ணலை அடையாமல் மிக்க நாளை வீணாள் ஆக்கினேன். கு-ரை: "கடும்புனலைக் கரந்தான்" என்றது, அது கரக்கலாகா ஆற்றலது என்பது உணர்த்துதற்கு. காமரு - அழகிய. 'விரும்பத் தக்க' என்றுமாம்.
|