பக்கம் எண் :

1135
 
2875.விடம்திகழும் அரவரைமேல் வீக்கி னானை

விண்ணவர்க்கு மெண்ணரிய அளவி னானை

அடைந்தவரை அமருலகம் ஆள்விப் பானை

அம்பொன்னைக் கம்பமா களிறட் டானை

மடந்தையொரு பாகனை மகுடந் தன்மேல்

வார்புனலும் வாளரவும் மதியும் வைத்த

தடங்கடலைத் தலையாலங் காடன் தன்னைச்

சாராதே சாலநாள் போக்கி னேனே.

6

2876.விடையேறிக் கடைதோறும் பலிகொள் வானை

வீரட்டம் மேயானை வெண்ணீற் றானை

முடைநாறு முதுகாட்டி லாட லானை

முன்னானைப் பின்னானை யந்நா ளானை


ஐயாறு, ஆரூர், பரிதிநியமம் இவை சோழநாட்டுத் தலங்கள். பாசூர்,தொண்டைநாட்டுத் தலம். பங்கம் - குறைபாடு; குற்றம். பரிந்தான் -இரங்கினான்.

6. பொ-ரை: விடமுடைய பாம்பினை இடையின் மேல் கட்டியவனாய், தேவர்களாலும் எண்ணுதற்கரிய அளவினனாய், தன்னை அடைந்தவரைத் தேவருலகம் ஆளச்செய்பவனாய், அழகிய பொன்னாய், அசையும் பெரிய களிற்றியானையை அழித்தவனாய், உமை திகழ் ஒருபாகனாய், சடைமுடிமேல் ஒழுகும் நீரையுடையகங்கையையும், கொடிய பாம்பையும், பிறையையும் வைத்தவனாய் அகன்ற கடலை ஒத்தவனாய்த் திகழும் தலையாலங்காட்டண்ணலை அடையாமல் மிக்க நாளை வீண்நாள் ஆக்கினேன்.

கு-ரை: வீக்கினான் - கட்டினான். எண்ணரிய அளவினான் - அளத்தற்கரிய அளவினையுடையவன்; என்றது, 'அளவின்மையுடையனாகலின், யாவராலும் அளத்தற்கரியவன்' என்றபடி. 'அளவிலான்' என்பதும் பாடம். 'அமரர் உலகம்' என்பது குறைந்து நின்றது. கம்பம் - அசைதல். அட்டான் - அழித்தான். மகுடம் -சடை முடி. வார் புனல் - ஒழுகும் நீர். வாளரவு - கொடிய பாம்பு. தடங்கடல், அடையடுத்த உவமையாகுபெயர்.

7. பொ-ரை: இடபமூர்ந்து வீட்டு வாயில்கள் தோறும் பிச்சையேற்பவனாய், வீரட்டங்கள் எட்டும் மேவினவனாய், வெண்ணீறு