| உடையாடை யுரிதோலே உகந்தான் தன்னை | | | உமையிருந்த பாகத்து ளொருவன் தன்னைச் | | | சடையானைத் தலையாலங் காடன் தன்னைச் | | | சாராதே சாலநாள் போக்கி னேனே. | 7 |
| 2877. | கரும்பிருந்த கட்டிதனைக் கனியைத் தேனைக் | | | கன்றாப்பின் நடுதறியைக் காறை யானை | | | இரும்பமர்ந்த மூவிலைவேல் ஏந்தி னானை | | | யென்னானைத் தென்னானைக் காவான் தன்னைச் | | | சுரும்பமரும் மலர்க்கொன்றை சூடி னானைத் | | | தூயானைத் தாயாகி உலகுக் கெல்லாந் | | | தரும்பொருளைத் தலையாலங் காடன் தன்னைச் | | | சாராதே சாலநாள் போக்கி னேனே. | 8 |
அணிந்தவனாய், பிணம் எரிந்து முடைநாறும் சுடுகாட்டில் ஆடுபவனாய், இறப்பு எதிர்வு நிகழ்வு ஆகிய முக்காலமும் ஆபவனாய், அரையிலுடை புலித்தோலாகவும் மேலாடை யானைத் தோலாகவும் அமைய விரும்பினனாய், உமைபொருந்தியபாகத்தோடுள்ள ஒருவனாய், சடையவனாய்த் திகழும் தலையாலங்காட்டண்ணலை அடையாமல் மிக்க நாளை வீணாள் ஆக்கினேன். கு-ரை: கடைதோறும் - வாயில்கள்தோறும். பலி - பிச்சை. "வீரட்டம்" என்ற பொதுமையால், எட்டனையும் கொள்க. முதுகாடு - சுடுகாடு. முன் - இறந்த காலம். பின்- எதிர்காலம். அந்நாள் - நிகழ் காலம். உடை - அரையில் உடுக்கப்படுவது. ஆடை -மேலே இடப்படுவது. 'இவை இரண்டனையும், புலியையும் யானையையும் உரித்ததோலேயாக விரும்பினான்' என்க. "உள் ஒருவன்" என்றதனை, 'உள்பொருள்' என்பது போலப் பண்புத்தொகையாகக் கொள்க. பாகத்து உள் ஒருவன் -பாகத்தோடு உள்ள ஒருவன். 8. பொ-ரை: கரும்பின்கண் இருந்த சாறுகொண்டு சமைத்த கட்டியையும் கனியையும் தேனையும் ஒப்பவனாய், கன்றாப்பூரின் நடுதறியாய், பன்றியின் வெண்மருப்பாலாகியகாறை அணியினனாய், இரும்பாலான மூவிலை வேலை ஏந்தியவனாய், எனக்கு முதல்வனாய், அழகிய ஆனைக் காவனாய், வண்டுமொய்க்கும் கொன்றை மலரைச்சூடியவனாய், தூயவனாய், தாயானவனாய், உலகுக்கெல்லாம் பொருள் வழங்குபவனாய்த் திகழும் தலையாலங்காட்டு அண்ணலை அடையாமல் மிக்க நாளைவீணாள் ஆக்கினேன்.
|