| 2879. | கைத்தலங்க ளிருபதுடை அரக்கர் கோமான் | | | கயிலைமலை அதுதன்னைக் கருதா தோடி | | | முத்திலங்கு முடிதுளங்க வளைக ளெற்றி | | | முடுகுதலுந் திருவிரலொன் றவன்மேல் வைப்பப் | | | பத்திலங்கு வாயாலும் பாடல் கேட்டுப் | | | பரிந்தவனுக் கிராவணனென் றீந்த நாமத் | | | தத்துவனைத் தலையாலங் காடன் தன்னைச் | | | சாராதே சாலநாள் போக்கி னேனே. | 10. |
திருச்சிற்றம்பலம்
உருத்திரன்' என்றுமாம், இனி, 'பண்ணளவு, எண்ணளவு, தண்ணரன்' என்பன, எதுகை நோக்கித் திரிந்தன என்றலுமாம். 10. பொ-ரை: இருபது கைகளையுடைய அரக்கர் கோமான் தோள்வளைகளைப் புடைத்து ஓடிச்சென்று ஆராயாது கயிலை மலையை விரைந்தெடுக்க அவன் முத்து விளங்கும் முடிகள் பத்தும் நடுங்கும் வண்ணம் திருவிரல் ஒன்றை அவன்மேல் வைத்து ஊன்ற அவன் தன் பத்துவாயாலும் பாடிய சாமகீதப் பாடலைக் கேட்டு இரக்கம் மிக்கவனாய் அவனுக்கு இராவணன் என்ற பெயரை ஈந்த தத்துவனாய்த் திகழும் தலையாலங்காட்டண்ணலை அடையாமல் மிக்க நாளை வீணாள் ஆக்கினேனே. கு-ரை: அது, பகுதிப் பொருள் விகுதி. தன், சாரியை. கருதாது - ஆராயாது. முடி - மகுடம். "துளங்க" என்புழி, 'அசைத்து' என ஒரு சொல் வருவிக்க. வளைகள் -தோள்வளைகள். அவைகளை 'எற்றி' என்றது, 'தோள்களைப் புடைத்துக் கொண்டு' என்றவாறு. முடுகுதல் - விரைதல்; அது, விரைந்து எடுத்த செயல்மேல் நின்றது. 'அவன் மேல் ஆக' என ஆக்கம் வருவித்து, 'வைப்பு அவன் மேலதாகும்படி' என உரைக்க. வைப்ப - ஊன்ற. பாடல் - இசை பாடுதல். பரிந்து - இரங்கி. "ஈந்த நாமத்தத்துவன்" என்று அருளினாராயினும், 'நாமம் ஈந்த தத்துவன்' என்றலே திருவுள்ளம் என்க. நாமம் - பெயர் 'இராவணன்' என்னும் பெயர், 'அழுதவன்' என்னும் பொருளுடையதாய், அவன் அஞ்ஞான்று அடைந்த துன்பத்தினை என்றும் நினைப்பித்து நின்றமை யறிக.
|