பக்கம் எண் :

1140
 
2881.விளைக்கின்ற நீராகி வித்து மாகி

விண்ணொடுமண் ணாகி விளங்கு செம்பொன்

துளைக்கின்ற துளையாகிச் சோதி யாகித்

தூண்டரிய சுடராகித் துளக்கில் வான்மேல்

முளைக்கின்ற கதிர்மதியும் அரவு மொன்றி

முழங்கொலிநீர்க் கங்கையொடு மூவா தென்றுந்

திளைக்கின்ற சடையானைத் திருமாற் பேறறெஞ்

செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.

2


கு-ரை: பார் - பூமி. பயன் வித்துக்களின் விளைவைத் தருதல். படைப்பு ஆகி - படைத்தல் தொழிலே தானாய் அதன்கண் நின்று. 'படைப்பானை' என்பதும் பாடம். பரிவோன்- இரங்குவோன். ஆராத - தெவிட்டாத. 'அடியார்கட்கு அமுதை' என்க. சீர் - புகழ்;அது, மார்க்கண்டேயரைக் காத்து, என்றும் பதினாறு வயதினராய் இருக்க அருளியதனால் ஆகியது. "நானே" என்னும் பிரிநிலை ஏகாரம், தாம்அடைதற்கு அரிதாதல் விளக்கி நின்றது. "செம்பவளக் குன்று" என்றது; உவமையாகுபெயர்.

2. பொ-ரை: விளைவை உண்டாக்கும் நீராயும், வித்தாயும், விண்ணாயும், மண்ணாயும், செம்பொன்விளையும் சுரங்கமாயும், அலகில் சோதியாயும், தூண்டுதல் வேண்டாவிளக்காயும், அசைவில்லா வானத்தின்மேல் தோன்றி ஒளிர்பிறையும் பாம்பும் என்றும் மூவாது நின்று ஒலிமிக்க நீரையுடைய கங்கையுடன் விளையாடி மகிழ்கின்ற சடையனாகவும் ஆகித் திருமால் பேற்றில் திகழும் எம்செம்பவளக் குன்றினை நான் சென்றடைந்தேன்.

கு-ரை: விளைக்கின்ற நீர் - வித்துக்களைப் பதப்படுத்தியும், பின்னர்அவற்றினின்றும் தோன்றும் முளைகளை வளர்த்தும் பயன் தரச்செய்கின்றநீர்; இதனை எடுத்தோதியது, அவன் உலகிற்குச் செய்து வரும் நலத்தினது சிறப்பு. அதனை மறவாது ஊன்றி உணர்வார்க்கே புலனாவதாதலை நினைந்து என்க. "விளைக்கின்ற நீராகி" என்றதனால், 'விளைகின்ற வித்துமாகி' என்பதும் போதரும். 'செம்பொற்றுளை' என இயையும்; ஈண்டு, 'துளை' என்றதுபொன்னின் பொருட்டு அகழப்படும் நிலச்சுரங்கத்தை; இதனை, 'ஆகரம்' என்ப. 'இது, தன்னை அடைந்தார்க்கு நிரம்பிய செல்வத்தைக் கொடுப்பது போல, இறைவன் தன்னை அடைந்தார்க்குப் பெரு நலத்தைத் தருபவன்'