| 2887. | வானகத்தில் வளர்முகிலை மதியந் தன்னை | | | வணங்குவார் மனத்தானை வடிவார் பொன்னை | | | ஊனகத்தில் உறுதுணையை உலவா தானை | | | ஒற்றியூர் உத்தமனை ஊழிக் கன்றைக் | | | கானகத்துக் கருங்களிற்றைக் காளத் தியைக் | | | கருதுவார் கருத்தானைக் கருவை மூலத் | | | தேனகத்தி லின்சுவையைத் திருமாற் பேற்றெஞ் | | | செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே. | 8 |
8. பொ-ரை: வானில் வளர் முகிலாயும், மதியமாயும், வணங்குவார் மனத்தில் உறைபவனாயும், அழகிய பொன்னாயும், உடம்பில் உயிர்க்குற்ற உறுதுணையாயும், அழிவில்லாதவனாயும், ஒற்றியூர் வாழ் உத்தமனாயும், ஊழிக்கு ஊழியாயும், கானகத்து வாழ் கருங்களிறாயும், காளத்தி வாழ்வானாயும், கருதுவார் கருத்துள்நிலவுபவனாயும், முதன் முதலாயும், தேனில் இனிய சுவையாயும், நிலவித்திருமாற்பேற்றில் திகழும் எம் செம்பவளக் குன்றினை நான்சென்றடைந்தேன். கு-ரை: வளர் - மிகுகின்ற; இதனை மதிக்குங் கூட்டுக. "முகில், மதி, சுவை" என்பன உவமையாகு பெயர்கள். "முகில்" என்றது, கைம்மாறு கருதாது உதவுங் கடப்பாடு உடைமை பற்றியும், "மதி" என்றது, அகவிருளைச் சிறிது சிறிதாக நீக்கி இறுதியில் முற்றும் நீக்குதல் பற்றியும் "தேனகத்தில் இன்சுவை" என்றது, பேரின்பஞ் செய்தல் பற்றியும் என்க. வடிவு - அழகு. ஊன் - உடம்பு,உயிர் உடம்பொடு கூடித் தொழிற்படுங்கால், அத்தொழிற்பாட்டிற்கு இறைவன் உடனாய் நின்று உதவி வருதல் பற்றி, "ஊனகத்தில் உறுதுணை" என்று அருளினார். உலவாதான் - அழியாதவன். ஒற்றியூர், காளத்தி தொண்டை நாட்டுத்தலங்கள். "காளத்தி" என்றதற்கு மேல் (பா.6.) உரைத்தவாறே உரைக்க. ஊழிக்கு அன்று - ஊழிக்கு ஊழி; 'அன்று' என்னும் இடைச்சொல் பெயர்த்தன்மைத்தாய் நின்று இரண்டனுருபு ஏற்றது. கருங்களிறு - யானை; என்றது காதல் பற்றி. "வானகத்து வளர் முகில்" என்றாற்போல, "கானகத்துக்கருங்களிறு" என்றதும், அதன் தன்மையை விதந்தருளிச் செய்தவாறு. 'மூலக்கருவை' என மாற்றி, 'முதல் முதலினை' என உரைக்க. தோற்றம் எய்தியவற்றுள்ளும், தம்மால் தோன்றுவனவற்றை நோக்கத் தாம் முதல்
|