| 2888. | முற்றாத முழுமுதலை முளையை மொட்டை | | | முழுமலரின் மூர்த்தியை முனியா தென்றும் | | | பற்றாகிப் பல்லுயிர்க்கும் பரிவோன் தன்னைப் | | | பராபரனைப் பரஞ்சுடரைப் பரிவோர் நெஞ்சில் | | | உற்றானை உயர்கருப்புச் சிலையோன் நீறாய் | | | ஒள்ளழல்வாய் வேவவுறு நோக்கத் தானைச் | | | செற்றானைத் திரிபுரங்கள் திருமாற் பேற்றெஞ் | | | செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே. | 9 |
எனப்பட்டு வழிநிலை முதலாய் நிற்பனவும் சில உளவாதல்பற்றி, ஒன்றாலும் தோன்றாது, எல்லாவற்றின் தோற்றத்திற்கும் தானே முதலாய் நிற்கும் இறைவனை, 'முதல் முதல்' என்று அருளிச்செய்தார். 9. பொ-ரை: மூவாத முதற்பொருளாயும், முளையாயும், மொட்டாயும், மலரின் வடிவினனாயும், எக்காலத்தும் வெறுப்பிலனாய்ப் பல்லுயிர்க்குந் துணையாகிஇரக்கமுடையனாயும், மேற் பொருளும், கீழ்ப்பொருளும் தான் ஆனவனாயும், மேலான ஒளிப் பிழம்பாயும், எண்ணுவார் மனத்தில் பொருந்தியிருப்பவனாயும், உயர்ந்த கரும்பு வில்லையுடைய மன்மதன் ஒள்ளிய நெருப்பிடத்து வெந்து நீறாகுமாறு செய்த பார்வையனாயும் திரிபுரங்களை அழித்தவனாயும் ஆகித்திருமாற் பேற்றில் திகழும் எம்செம்பவளக் குன்றினை நான் சென்றடைந்தேன். கு-ரை: முற்றாத முதல் - இளையவேர். முழுமுதல் - அனைத்து வேர். மொட்டு - அரும்பு. முழு மலர்- மலர்ந்த மலர். "மலரின்" என்னும், இன், வேண்டாவழிச் சாரியை; 'மலராம் மூர்த்தி' என்பதே பொருள். 'பல்லுயிர்க்கும் பற்றாகிப்பரிவோன்' என்க. பற்று - துணை. பரிவோன் - இரங்குவோன். "பற்றாகிப்பரிவோன்" என்றதனை, 'ஓடி வருபவன்' என்பது போலக் கொள்க. பரஞ்சுடர் - மேலான ஒளி. பரிவோர் - அன்பு செய்வோர். உற்றான் - பொருந்தியிருப்பான். உறு நோக்கம் - உற்ற நோக்கம்; பார்த்தபார்வை. இங்குப் பிறவாறு ஓதுவன பாடம் அல்ல என்க.
|