| 2889. | விரித்தானை நான்மறையோ டங்க மாறும் | | | வெற்பெடுத்த இராவணனை விரலா லூன்றி | | | நெரித்தானை நின்மலனை யம்மான் தன்னை | | | நிலாநிலவு செஞ்சடைமேல் நிறைநீர்க் கங்கை | | | தரித்தானைச் சங்கரனைச் சம்பு தன்னைத் | | | தரியலர்கள் புரமூன்றுந் தழல்வாய் வேவச் | | | சிரித்தானைத் திகழொளியைத் திருமாற் பேற்றெஞ் | | | செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே. | 10 |
திருச்சிற்றம்பலம்
10. பொ-ரை: நான்மறைகளையும் ஆறங்கங்களையும் விரித்தவனும், கயிலை மலையை எடுக்கமுயன்ற இராவணனை விரலூன்றித் துன்புறுத்தியவனும், குற்றமற்றவனும், தலைவனும், பிறைதங்கிய செஞ்சடைமேல் நீர்நிறைந்த கங்கையைத் தரித்தவனும், இன்பத்தைச் செய்யும் சங்கரனும், இன்ப காரணனான சம்புவும் பகைத்தார்புரங்கள் மூன்றும் நெருப்பிடத்து வேகுமாறு சிரித்தவனும், ஒளிப்பிழம்பாய் விளங்கியவனும் ஆகித் திருமாற்பேற்றில் திகழும் எம் செம்பவளக் குன்றினைநான் சென்றடைந்தேன். கு-ரை: அம்மான் - தலைவன். சங்கரன் - இன்பத்தைச் செய்பவன். சம்பு - இன்பத்தை உண்டாக்குபவன். தரியலர்கள் - பகைவர்கள். திருநாவுக்கரசர் புராணம்
| அந்நகரில் அவ்வண்ணம் அமர்ந்துறையும் நாளின்கண் | மன்னுதிரு மாற்பேறு வந்தணைந்து தமிழ்பாடிச் | சென்னிமிசை மதிபுனைவார் பதிபலவுஞ் சென்றிறைஞ்சித் | துன்னினார் காஞ்சியினைத் தொடர்ந்தபெருவ் காதலினால். | -தி.12சேக்கிழார். |
|