81. திருக்கோடிகா பதிக வரலாறு: நாவுக்கரசர், துருத்தி, வேள்விகுடி, எதிர்கொள்பாடி முதலானபல பதிகளை வணங்கி ஆவடுதண்டுறை செல்பொழுதில் திருக்கோடிகா வணங்கிப் பாடியருளியது இத் திருப்பதிகம். (தி.12 திருநாவு. புரா.190.) குறிப்பு: இத்திருப்பதிகம், 'கண்டாய்' என்னும் முடிபுடைய தொடர்களால் இறைவன் பெருமைகளை வகுத்தருளிச்செய்தது. திருத்தாண்டகம் | ப. தொ. எண்: 294 | பதிக எண்: 81 |
திருச்சிற்றம்பலம் | 2890. | கண்டலஞ்சேர் நெற்றியிளங் காளை கண்டாய் | | | கல்மதில்சூழ் கந்தமா தனத்தான் கண்டாய் | | | மண்டலஞ்சேர் மயக்கறுக்கும் மருந்து கண்டாய் | | | மதிற்கச்சி யேகம்பம் மேயான் கண்டாய் | | | விண்டலஞ்சேர் விளக்கொளியாய் நின்றான் கண்டாய் | | | மீயச்சூர் பிரியாத விகிர்தன் கண்டாய் | | | கொண்டலஞ்சேர் கண்டத்தெங் கூத்தன் கண்டாய் | | | கோடிகா அமர்ந்துறையுங் குழகன் தானே. | 1 |
1. பொ-ரை: திருக்கோடிகாவில் விரும்பியுறையும் அழகனே, நெற்றியிடத்துக் கண் சேர்ந்த இளங்காளையாய், பக்கமலைகளான மதில்கள் சூழ்ந்த கந்தமாதனத்துறைவானாய், பலவகைப் புவனங்களிலும் சென்று பிறத்தற்குக் காரணமாகிய மயக்கத்தை அறுக்கும் மருந்தாய், மதிலாற் சூழப்பட்ட காஞ்சி மாநகரத்து ஏகம்பத்தைமேவியவனாய், தேவருலகிற் சென்று எறிக்கும் விளக்கொளியாய், மீயச்சூரில் நிலைத்து நிற்கும் வேறுபடு தன்மையனாய், மேகத்தினது அழகு சேர்ந்தகண்டத்தனாய் எம் கூத்தனாய் விளங்குவான் ஆவான். கு-ரை: 'கைத்தலம்' என்பது போல, 'கண்டலம்' என்பது இரு பெயரொட்டு: தலம்வடசொல்லாதலின் ணகரம் திரியாது நிற்றலும் பொருந்துவதாயிற்று: விண்டலம் என்பதும் அன்னது. 'நெற்றித்தலம்' என
|