பக்கம் எண் :

1151
 
2892.அலையார்ந்த புனற்கங்கைச் கடையான் கண்டாய்

அடியார்கட் காரமுத மானான் கண்டாய்

மலையார்ந்த மடமங்கை பங்கன் கண்டாய்

வானோர்கள் முடிக்கணியாய் நின்றான் கண்டாய்


உணரமாட்டாதார், 'வீட்டு நிலையும் ஓர் உலகமே' என மயங்கிக் கொள்வர்.அது பொருந்தாமை, "மற்றும் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்க -லுற்றார்க் குடம்பு மிகை" (குறள் - 345) என முன்னே அருளிச் செய்தமையால் தெற்றென விளங்கும்; எவ்வாறு எனின், வீடாவது பிறப்பற்ற நிலையும், பிறப்பாவது உடம்புமே என்பன எல்லார்க்கும் உடம்பாடாகலின், வீடுபெற்றார்க்கு உடம்பு உளதாகாது என்பது தானே விளங்கிக் கிடப்பவும், வீட்டு,நிலையை, 'உலகம்' என வழங்கும் வழக்கினது கருத்தறியாது, எல்லா உலகங்களினும் மேலாய் உள்ள ஓர் உலகமே, 'வீட்டுலகம் போலும்' எனவும், 'அவ்வுலகம் போலஅதன்கண் உள்ள இன்பத்தை நுகர்தற்கு ஏற்ப, 'வீட்டுடம்பு' என்னும் ஒருவகைஉடம்புகளும் உள்ளன போலும்' எனவும் மலையாமைப் பொருட்டு அதனை எடுத்தோதியருளினாராதலின் என்க. இதனானே வீட்டு நிலையும் ஒரு புவனமாயும், அதன்கண் இன்பத்தை நுகர்தற்குக் கருவியும் தனுவாயும் ஒழியின், உலக இன்பம்போல, வீட்டின்பமும் வரையறைப்பட்ட பொருளினால் உளதாவதாய், உடம்பளவில் வரையறைப்பட்டு நின்று, காலம். இடங்களாலும் வரையறைப் படுமாகலின், வீட்டின்பத்தை, 'நிரதிசய இன்பம்,' எனவும், 'வரம்பிலின்பம்' எனவும், கூறும் சொற்கள் பலவும் பொருள்படா தொழியும் என்பதும் பொருந்துமாறு பற்றி உணர்ந்து கொள்ளப்படும். சிவநெறி நூல்கள் சிவலோகம் முதலியவற்றைப் பதமுத்தி இடமாகக் கூறுதலன்றிப் பரமுத்தி இடமாகக் கூறாமை யறிக. இத்தகைய பரலோகத்தை அடையும் வாயில், எவ்வகைத்தான உடம்பும் இல்லாது அருளேவடிவாகிய சிவபிரானை உணரும் உணர்வே யாகலானும், அவ்வுணர்வும் அவன் தரவே பெறற்பாலதாகலானும், "பரலோக நெறி காட்டும் பரமன்" என்றருளினார். பரமன் - யாவர்க்கும் மேலானவன். செண்டாடி - செண்டாடுதல்போல உழற்றி.az கொண்டாடும் - பாராட்டுகின்ற.

3. பொ-ரை: திருக்கோடிகாவில் விரும்பியுறையும் அழகனே, அலைகளுடன் கூடிய நீரையுடையகங்கை தங்கும் சடையனாய், அடியார்களுக்கு ஆரமுதாய், மலையில் தோன்றிவளர்ந்த இளமங்கை பார்வதியின் பங்கனாய், வானோர்தம் முடிக்கணியாய்த்தன் திருவடிகளைத்